கடலூர், மே 5- மாமேதை காரல் மார்க்சின் 204ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி 15 மையங்களில் நடைபெற்றது. கடலூர் சூரப்பன் நாயக்கன் சாவடியில் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள காரல்மார்க்ஸின் சிலைக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். “மார்க்ஸ் பேராசான் என்ற தலைப் பில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு பேசினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மருதவாணன் சுப்பராயன், முத்த தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநகர செய லாளர் அமர்நாத், ஒன்றியச் செயலா ளர் பஞ்சாசரம், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் செம்மலர், எஸ்.கே.பக்கிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.