states

சாட்டையைச் சுழற்றும் ஜாட் இன மக்கள்

ராஜஸ்தான் மற்றும் அரியானா வில் தொகுதிகள் கணிசமாக குறையும் என பாஜகவின் உள்  கணிப்பு தெரிவித்துள்ளது.  இரு மாநிலங்களிலும், ஆதிக்கம் செலுத்தும் ஜாட் பிரிவினர், பாஜகவுக்கு  எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரு கின்றனர். காங்கிரஸில் இருந்து விலகிய  தலைவர்களுக்கு உடனடியாக சீட்  கொடுக்கப்பட்டதும் சிக்கலாகி உள்ளது.  கடந்த மக்களவைத் தேர்தலில் அரி யானாவில் 10 இடங்களிலும், ராஜஸ்தா னில் 25 இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றது. ராஜஸ்தானில் பார்மர், சுரு, நாகூர், தௌசா, டோங்க், கரவ்லி ஆகிய இடங்  கள் பிரச்சனைக்குரியவை என பாஜக கருதுகிறது. நாகூரில் ஆர்எல்பியின் ஹனுமான் பெனிவால் மற்றும் சுருவில் சமீபத்தில்  பாஜகவில் இருந்து விலகிய  ராகுல் கஸ்வான் ஆகியோர் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள். இரு வரும் ஜாட் பிரிவின் தலைவர்கள். ராணு வத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட அக்னி பாத் திட்டம், விவசாயிகள் போராட்டம்,  மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஆகி யவை பாஜகவுக்கு எதிர்மறையான காரணிகளாக தெரியவந்துள்ளது. அரியானாவில் ரோடக், சோனிபட், சிர்சா, ஹிசார், கர்னால் ஆகிய தொகுதி கள் பாஜகவுக்கு சவாலாக உள்ளன. அரியானாவில் மூத்த தலைவர் பிரேந்தர்  சிங் மற்றும் அவரது மகன் பிஜேந்தர் சிங்  ஆகியோர் சமீபத்தில் பாஜகவில் இருந்து  விலகினர். பிரேந்தர் சிங் ஜாட் பிரிவைச்  சேர்ந்த முக்கிய தலைவர். காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் பிசிசி தலை வர் அசோக் தன்வார் மற்றும் முன்னாள்  எம்பி நவீன் ஜிண்டால் ஆகியோருக்கும் பாஜக சீட் வழங்கியது. இவர்கள் இரு வரையும் பாஜகவினர் தலைவர்களாக ஏற்கவில்லை. பாஜகவுக்கு கடும் போட்டி மக்களவைத் தேர்தலில் பாஜக கடும்  போட்டியை சந்திக்கும் என இந்து ஜிஎஸ்டிஎஸ்-லோக்நீதி முன்கணிப்பு ஆய்வு கூறுகிறது. பாஜக அரசின் செயல்  பாடுகள் திருப்தி என தெரிவித்த வர்களின் சதவீதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. கடுமையான விலை வாசி உயர்வு, வேலையில்லாத் திண்  டாட்டம் மற்றும் வறுமை ஆகியவை தேர்தலில் முக்கிய விவாதப் பொரு ளாக உள்ளன என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பாஜக அரசுக்கு எதிராக அடித்தட்டு மக்களிடையே கடும் கோபம் நிலவுவதை கணக்கெடுப்பு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. 2019 தேர்தலுக்கு முந்தைய கருத்துக்  கணிப்பில், 65 சதவிகித மக்கள் பாஜக அரசின் செயல்பாடு குறித்து திருப்தி அடைந்தனர், ஆனால் இந்த முறை அது 57 சதவிகிதமாக குறைந்துள்ளது. 44 சதவிகிதம் பேர் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், 39 சதவிகி தம் பேர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்  ளனர். 17 சதவிகிதம் பேர் தங்கள் நிலைப்  பாட்டை குறிப்பிடவில்லை. சிறுபான்மை யினர், பட்டியல் சாதியினர் மற்றும் ஓபிசி  மக்கள் மத்தியில் பாஜக அரசாங்கத் திற்கு எதிரான உணர்வு அதிகரித்து வரு வதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.