சென்னை,மே 28- இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதற்கு விரோதமாக சங்கராச்சாரியர்கள், வேதவிற் பனர்கள், மதத்தலைவர்களை அழைத்து நாடாளுமன்ற திறப்பு விழாவை மதவிழா வாக நடத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். சென்னையில் ஞாயிறன்று (மே 28) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித் துள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் தலைவராக உள்ள குடியரசுத் தலைவரை அழைத்து நாடாளுமன்றத்தை திறக்க வேண்டும். ஆனால் திறப்பு விழாவிற்கு கூட அவரை மோடி அரசு அழைக்காமல் அவமானப்படுத்தியுள்ளது. இது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. ஜனநாயகப் பண்பற்ற முறை யில் எதிர்ப்பை உதாசீனப்படுத்திவிட்டு, நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதற்கு விரோதமாக சங்காராச்சாரி யர்கள், வேதவிற்பனர்கள், மதத்தலைவர் களை அழைத்து நாடாளுமன்ற திறப்பு விழாவை மதவிழாவாக நடத்தியுள்ளனர்.
சாவர்க்கர் பிறந்தநாளில்
மதச்சார்பற்ற நாடு என்ற அரசியலமை ப்புச் சட்டத்தின் அடிப்படையான கோட்பா ட்டையே காலில் போட்டு மிதித்துள்ளனர். மகாத்மா காந்தியை கொலை செய்தவர் களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த விழாவை நடத்தியுள்ளனர். இது சுதந்திரப் போராட்ட வரலாறுக்கு எதிரானது. இந்த திறப்பு விழா, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துள்ளது என்றார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பாலகிருஷ்ணன் பதில் அளித்தார்.
ஒற்றைக் கலாச்சாரம்
நாடாளுமன்ற திறப்பு விழா கல்வெட் டில் இந்தி, ஆங்கிலம் மட்டும் இடம்பெற்று இருப்பது குறித்த கேள்விகளுக்கு பதி லளித்த பாலகிருஷ்ணன், “மாநிலங்களை, மாநில உரிமைகளை, மொழி உரிமைகளை ஆர்எஸ்எஸ்-பாஜக அங்கீகரிக்கத் தயா ராக இல்லை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்கிற ஒற்றைக் கலாச்சாரத்தை பிர திபலிக்கின்றனர். அதையே நாடாளுமன்ற திறப்பு விழா கல்வெட்டிலும் பிரதிபலித் துள்ளனர். மேடையில் தமிழ்மொழி குறித்து பிரதமர் பேசுவார். தமிழுக்கு என்ன முக்கி யத்துவம் கொடுத்துள்ளார்? சமஸ்கிருத மொழியை வளர்க்க 2 ஆயிரம் கோடி செலவிடுகிறார்கள். தமி ழுக்கு எவ்வளவு செலவிடுகிறார்கள்? மொழி உரிமையை ஏற்று அங்கீகரிக்கிற கட்சியல்ல பாஜக.” என்றார்.
அடக்குமுறை கருவி
செங்கோல் குறித்த கேள்விக்கு பதி லளித்த அவர், “தமிழ்நாட்டின் பாரம்பரி யத்திற்கும் செங்கோலுக்கும் சம்பந்தம் இல்லை.சோழர்கள் ஆட்சி அதிகாரத்தை மாற்றிக் கொள்ள செங்கோலை பயன் படுத்தி இருக்கலாம். சோழர்கள் ஆட்சி மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல. சோழர்கள் ஆட்சிக் காலத்தில் அடக்கு முறைகள், ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உழைப்பாளிகளை, விவ சாயிகளை வேட்டையாட செங்கோலை பயன் படுத்தினார்கள். எனவே, செங்கோல் என்பது மன்னர்களின் அடக்குமுறை கருவியாக இருந்துள்ளது.
மக்களாட்சியின் கருவி அல்ல
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதால் எந்த பயனும் இல்லை. பாஜக மத அரசியலை முன்னெடுக்க இதனை செய்கிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தி ற்கு, மக்களுக்கு திருவாடுதுறை ஆதீ னம்தான் தலைவரா? திருவாடுதுறை மடத் திற்கு சொந்தமான நிலத்தில் பயிரிடும் குத்த கை விவசாயிகளின் உரிமைகளை ஆதீனம் ஏற்கிறாரா? இன்றைக்கும் சுரண்டிக் கொண்டுதானே இருக்கிறார்? மதத் தலை வர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்துவது தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது” என்றார் பாலகிருஷ்ணன்.