சென்னை, மே 10- தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக நிதியமைச்சர் மே 7 அன்று சட்ட மன்றத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பை யும் ஏற்படுத்தியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறப் பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறை வேற்றப்படும் என்று முதலமைச்சர் உத்தர வாதம் அளித்து வருகிறார். கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய நிதிய மைச்சர், அதற்கு மாறாக பேசுவது பொருத்த மற்றது. அரசாங்கம் என்பது லட்சக்க ணக்கான அரசு ஊழியர்களையும், ஆசிரி யர்களையும் உள்ளடக்கியது. ராஜஸ்தான் அரசு பிஎப்ஆர்டிஏ-வில் இணைந்து, பணத்தை கொடுத்துவிட்டு திரும்ப கேட்கிறார்கள். தமிழ்நாடு அரசு பிஎப்ஆர்டிஏ-வில் இணையவே இல்லை. ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணம் எங்கே? நிதியமைச்சர் பெருமுதலாளி களின் எண்ண ஓட்டத்தில் பேசக்கூடாது. பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமற்றது என்பது அரசின் நிலைப்பாடாக இருக்கு மானால், ஆசிரியர்களையும் அரசு ஊழி யர்களையும் ஒன்றுதிரட்டி போராட்டங் களை முன்னெடுப்போம் என்று கூறப்பட் டுள்ளது.