states

குஜராத்தில் 17 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 22 பேரையும் விடுதலை செய்த நீதிமன்றம்!

அகமதாபாத், ஜன.25- குஜராத் கலவரத்தின்போது, 2 குழந்தைகள் உள்பட 17 சிறு பான்மையினர் கொலை செய்யப்  பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட  22 பேரை விடுதலை செய்து குஜ ராத்தின் ஹலோல் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2002-ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடந்தது. 59 இந்து யாத்ரீகர்கள் உடல் கருகி இறந்தனர். ரயிலுக்குள் சமையல் செய்ததே தீ விபத்திற்கு காரணம் என்று பின்னாளில் கண்ட றியப்பட்டது என்றாலும், முஸ்லிம் களே ரயில் பெட்டிக்குத் தீ வைத்த தாக கூறி, சங்-பரிவாரங்கள் குஜ ராத்தில் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இதில், இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக கொன்று வீசப்  பட்டனர். உயிரோடு எரிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலி யல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட னர். குழந்தைகள் கூட வெட்டி வீசப்  பட்டனர். எனினும், இதுதொடர்பாக தொட ரப்பட்ட- குல்பர்கா சொசைட்டி வழக்கு, பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய் யப்பட்டனர். 

இந்த வரிசையில், குஜராத் மாநி லம் திலோல் கிராமத்தில் 2 குழந்தை கள் உட்பட 17 சிறுபான்மையினரை படுகொலை செய்து எரித்த வழக்கி லும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்  போது விடுதலை செய்யப்பட்டு உள்  ளனர். பஞ்ச்மஹால் மாவட்டத்திற்கு உட்பட்ட திலோல் கிராமத்தில், கடந்த  2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம்  தேதி இந்த கொடூரச் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 8 பேர் வழக்கு விசா ரணை நடைபெறும் காலத்திலேயே இறந்து விட்டனர்.  இந்நிலையில், வழக்கு விசா ரணை முடிவடைந்த நிலையில், ஹலால் நகர  கூடுதல் செசன்சு நீதி மன்ற நீதிபதி ஹர்ஷ் திரிவேதி புத னன்று தீர்ப்பு வழங்கினார். அப் போது இவ்வழக்கில், குற்றம்சாட் டப்பட்ட 22 பேர் மீதான குற்றத்தை  நிரூபிக்க போதுமான சாட்சியங்கள்  மற்றும் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவர்கள் அனைவரையும் விடு தலை செய்தார்.  சம்பவம் நடந்த 2 ஆண்டு களுக்கு பிறகுதான் வழக்கு தொட ரப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்டதாக கூறும் நபர்களின் உடல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் நதியின் கரை யோரம் கிடந்த எலும்புக் கூடுகளை  கைப்பற்றி போலீசார் ஆதாரமாக தெரிவித்துள்ளனர். ஆனால், இவற்றை போதுமான ஆதாரமாக கருதமுடியாது என்று கூறி, அனை வரையும் விடுதலை செய்வதாக நீதி பதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள் ளார்.