சென்னை, அக்.11- கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் இன்டர்ன்ஷிப் உத வித்தொகையை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி, மாநி லச் செயலாளர் க.நிருபன் சக்கர வர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டில் செய் யப்படும் இன்டர்ன்ஷிப்கான உத வித்தொகையை மருத்துவ மாண வர்களுக்கு இணையாக ரூ. 25 ஆயி ரமாக உயர்த்தி தரக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தற்போது ஒன்றிய அரசாங்கம் ரூ. 3 ஆயிரம், மாநில அரசாங்கம் ரூ. 7500 என மொத்தம் 10,500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் படிக்கக்கூடிய கால் நடை மருத்துவ மாணவர்களுக்கு இதைவிட அதிகமாக உதவித் தொகையை வழங்கும் சூழலில் தமிழக மாணவர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச உதவி தொகையினை வழங்குவது என்பது தமிழக மாண வர்களை வஞ்சிக்கும் செயலாகும். உதவி தொகையை உயர்த்தி தரக் கோரி பால்வளத்துறை அமைச் சரை சந்தித்து தங்கள் கோரிக்கை யை தெரிவித்த போது, இந்த ஆண் டில் துவங்கப்படும் இன்டர்ன்ஷிப்பில் இருந்து உதவித்தொகை உயர்த் தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்டர்ன்ஷிப் துவங்கப்படவுள்ள நிலையில் உத வித்தொகையை உயர்த்துவது குறித்தான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருப்பது மாணவர்களை ஏமாற்றும் செய லாகும். எனவே இந்த ஆண்டு முதல் தமிழக அரசு, மருத்துவ மாணவர் களுக்கு இணையாக ரூ. 25 ஆயி ரத்தை ஆண்டுதோறும் 3 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர்.