சேலம்,ஏப்.9- மாம்பழம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சேலம் மாம்பழம் தான். அந்த அளவுக்கு சேலத்து மாம்பழம் தனி ருசியை கொண்டுள்ளது. சேலம் மார்க்-கெட்டிற்கு வரகம்பாடி, வாழப்பாடி, பேளூர், கருமந்துறை, அயோத்தியாப்பட்டணம், ஆத்தூர், நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, ஓமலூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த வாரத்தை விட தற்போது சேலம் மார்க் கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் பெங்களூரா, மல்கோவா, இமாம்பசந்த், குண்டு மாம்பழம், நடுசாலை, பங்கனப்பள்ளி, செந்தூரா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கு மாம்பழங்கள் அனுப்பி வைக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆன் லைன் ஆர்டர்களும் குவிந்து வருகிறது. ஒரு கிலோ மாம்பழம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையா கிறது. ஆனாலும் பருவம் தவறி பெய்த மழையால் கடந்த ஆண்டை விட வரத்து குறைவாகவே உள்ளதால் விலை அதி கரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் துள்ளனர்.