states

வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது?

மதுரை, செப். 13-  தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்கு களாக பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து  தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. மதுரை வாடிப்பட்டி பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தனபால் என்பவர்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

  அதில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி  கொலை, மரணம், பாலியல் பலாத்காரம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்,  பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்க ளின் குடும்பத்தினருக்கு 3 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை, பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு கல்வி, மூன்று மாதங்களுக்கு வீட்டுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் ஆதிதிராவிடர், பழங்குடியி னர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.  எனவே, தமிழ கத்தில் 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்க ளை கண்டறிந்து, கொலை வழக்கு பதியப்பட்ட வழக்குகளில்,  பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விதி களின் அடிப்படையில் விவசாய நிலம்,வேலைவாய்ப்பு வழங்க உத்தர விட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கின் விசாரணை செவ்வாயன்று  நீதிபதிகள் மகாதேவன்,  சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு நடைபெற்றது.  அப்போது நீதிபதிகள், இதுவரை தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உத வித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து தமிழக உள்துறைச் செயலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட னர். மேலும் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

;