கோவையில் நாளை வேலை கேட்டு வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம்
பி.ஆர்.நடராஜன் எம்.பி, அ.அ.ரஹீம் எம்.பி, பங்கேற்பு
கோவை, ஏப்.19- இளைஞர்களுக்கு வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் 3 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பிரச் சாரம் வியாழனன்று கோவையிலிருந்து துவங்க உள் ளது. அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண் டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகத்தின் நான்கு மையங்களிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ள னர். இதன் ஒருபகுதியாக, கோவையில் வியாழனன்று காலை 9 மணியளவில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பிருந்து பிரச்சார குழுவினர் தங்களது பயணத்தை துவக்க உள்ளனர். இதன் துவக்க விழாவில் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் அ.அ.ரஹீம் எம்.பி., பங்கேற்று பிரச்சார பயணத்தை துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து பயணக்குழுவினர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதன்பின்னர் அன்றைய தினம் மாலை 7 மணியளவில் இருகூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங் கேற்று சிறப்புரையாற்றுகிறார். மேலும், வாலிபர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
நடக்க இருப்பவை
18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நாள்: ஏப்.19 (புதன்கிழமை) நேரம்: மாலை 6 மணி இடம்: கேஆர்சி சிட்டி சென்டர், திருப்பூர். கருத்துரை: நாடு எங்கே செல்கிறது? ஜி.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.,
குடிநீர் நிறுத்தம்
திருப்பூர், ஏப்.19- திருப்பூர் மாநகராட்சி வார்டு எண்கள் 6, 8, 16, 17, 21 முதல் 29, 36, 37, 42, 43, 44, 49, 52, 55 மற்றும் 56 ஆகிய 22 வார்டுகளில் புத னன்று குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநக ராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள் ளார். மூன்றாவது குடிநீர் திட் டத்தின் பிரதான குழாயில் நீர் கசிவு சீரமைப்பு மற்றும் பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குடிநீர் விநியோ கம் நிறுத்தப்படும் என்றும், மறுநாள் வியாழனன்று முதல் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவித்துள்ளார்.
மே தின விழா: சிஐடியு, ஏஐடியுசி கூட்டாக கொண்டாட முடிவு
திருப்பூர், ஏப்.19- உழைப்பாளர்கள் உரிமை திருநாளான மே தின விழாவை திருப்பூர் மாவட்டத்தில் எட்டு ஊர்களில் கூட்டாக கொண்டாடுவது என்று சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 136 ஆவது மே தின விழாவை இந்த ஆண்டு கொண்டாடுவது குறித்து, திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி, சிஐடியு சங்கங்களின் நிர் வாகிகள் கூட்டம் திங்களன்று காலை 11மணி அளவில் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற் றது. சிஐடியு மாவட்ட தலைவர் கே. உண்ணி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளா ளர் டி.குமார், சிஐடியு பனியன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத், ஏஐடி யுசி மாவட்ட தலைவர் சி.பழனிசாமி, ஏஐடி யுசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில், 2022 மே தின விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவது என்றும், திருப்பூர், அவி னாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, பல்லடம், பொங்க லூர் ஆகிய ஊர்களில் ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட் டது. இந்த பொதுக் கூட்டங்களில் ஏஐடியுசி, சிஐடியு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும், திருப்பூரில் பி.என். ரோடு ஏஐடியுசி அலுவலகத்தில் இருந்தும், அவினாசி ரோடு சிஐடியு அலுவலகத்தில் இருந்தும் பேரணி புறப்பட்டு புஷ்பா ரவுண்டானாவில் இணைந்து ரயில்வே மேம்பாலம் வழியாக அரிசிகடை வீதியில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு கள் எடுக்கப்பட்டது.
கோவையில் நாளை துவக்கம் வேலை கேட்டு வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பயணம் பி.ஆர்.நடராஜன் எம்.பி, அ.அ.ரஹீம் எம்.பி, பங்கேற்பு
கோவை, ஏப்.19- இளைஞர்களுக்கு வேலை கேட்டு இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் சார்பில் 3 ஆயிரம் கி.மீ. சைக் கிள் பிரச்சாரம் வியாழனன்று கோவையிலிருந்து துவங்க உள்ளது. அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப் பிட வேண்டும். புதிய பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களை பாது காத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழகத்தின் நான்கு மையங்களிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர். இதன் ஒருபகுதியாக, கோவையில் வியாழனன்று காலை 9 மணியளவில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பிருந்து பிரச்சார குழுவினர் தங்களது பயணத்தை துவக்க உள்ளனர். இதன் துவக்க விழாவில் வாலிபர் சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் அ.அ.ரஹீம் எம்.பி., பங்கேற்று பிரச்சார பயணத்தை துவக்கி வைக்கி றார். இதைத்தொடர்ந்து பயணக்குழுவினர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதன் பின்னர் அன்றைய தினம் மாலை 7 மணியளவில் இருகூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள் ளது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மேலும், வாலிபர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.