அழகரின் வருகையை அறிய புதிய செயலி அறிமுகம்
மதுரை, ஏப்.13- சித்திரை திருவிழாவின்போது பொது மக்களின் நலன் கருதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில், ‘‘மதுரை காவலன்’’ (MADURAI KAVALAN) என்ற செயலியில் ‘‘டிராக் அழகர்’’ என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக ஏப்ரல் 14-ஆம் தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவில் செல்லும்வரை, ஒவ்வொரு இடத்தையும் செல்போனில் ‘‘Track Alagar’’ என்ற லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
திருவில்லிபுத்தூர், ஏப்.13- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட் டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமி யை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர் கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங் கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக திருவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சங்கிலிப்பாறை, தாணிப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரக அலுவலர் கோவிந்தன் தெரிவித்துள்ளார்.
வைகை ஆற்றில் குளிக்க சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி பலி
தேனி, ஏப்.13- வைகை ஆற்றில் குளிக்க சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி பலியானார். பெரியகுளம் அருகே குள்ளப்புரத் தைச் சேர்ந்த நாகமநாயக்கர் மனைவி மயிலம்மாள்(75). வைகை அணைக்கு வெளியில் உள்ள பாலத்திற்கு அடியில் நேற்று முன்தினம் குளித்துக் கொண்டி ருந்தார் அப்போது ஆழமான இடத்தில் தவறி விழுந்து மூச்சுத் திணறி இறந் தார். இதுகுறித்து வைகை அணை காவல்துறையினர் விசாரித்து வருகின்ற னர்.
சித்திரைத் திருவிழா: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
மதுரை, ஏப்.13- சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மனின் பட்டாபி ஷேகம் செவ்வாயன்று இரவு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டப் பட்டு மதுரையின் ஆட்சி பொறுப்பை ஒப்ப டைக்கும் வகையில், மீனாட்சி அம்மனிடம் வெள்ளி செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு பூக்க ளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்த மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோலை மீனாட்சி அம்மன் அறங்காவ லர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் பெற்று, கோவிலை சுற்றி வந்து அம்மனிடம் மீண்டும் சமர்ப்பித்தார். இதனையடுத்து மீனாட்சியம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா சென்று பக்தர் களுக்கு தரிசனம் அளித்தார். புதனன்று தி விஜயம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வியாழனன்று நடைபெறவுள்ளது.
காலமானார்
தேனி, ஏப்.13- தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ஆர். சித்ரா என்ற தமிழ்ச்செல்வி (57) உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். இவர் தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்க மாநிலத் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னராகவும் பணியாற்றிய பா.ராமமூர்த்தி யின் மனைவி ஆவார். அன்னாரின் மறைவு செய்தியறிந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன், எம்.ராமச்சந்திரன், சி.முனீஸ்வரன், சு. வெண்மணி, டி.கண்ணன், மூத்த தலை வர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கர சுப்பு, இடைக்கமிட்டி செயலாளர்கள் இ. தர்மர், எம்.வி.முருகன், சஞ்சீவி, மீனாட்சி சுந்தரம், எஸ்.செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வா கிகள், தமுஎகச நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு
திருவில்லிபுத்தூர், ஏப்.13- வத்திராயிருப்பு ராமசாமியாபுரம் மேலத் தெருவில் வசிப்பவர் முத்து மகன் ஈஸ்வரன். இவர் அதே பகுதியில் வசிக்கும் 18 வயது இளம்பெண் அவரது தாயாருடன் வயக்காட்டு வேலைக்கு செல்லும் போது, கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, ஈஸ்வரன் அவர் கையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயன்றுள்ளார். இதுகுறித்து இளம் பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரனை தேடி வரு கின்றனர்.
ஆடு திருட முயன்ற 2 பேர் மீது வழக்கு
திருவில்லிபுத்தூர், ஏப்.13- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி காந்தி நகரில் வசிப்பவர் மகா லிங்கம் (42). இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வரு கிறார். இந்நிலையில், 2 வாலிபர்கள் இரண்டு ஆடுகளை தூக்கிக்கொண்டு இருந்தனர். ஆடுகளின் சத்தம் கேட்டு மகாலிங்கம் எழுந்து பார்த்தபோது, இரண்டு வாலிபர்களும் ஆடுகளையும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை யும் விட்டு விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து மகாலிங்கம் தந்த புகாரின் பேரில் நத்தம்பட்டி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாடியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி
திருவில்லிபுத்தூர், ஏப்.13- திருவில்லிபுத்தூர் நகர் தைக்காபட்டி யில் வசிப்பவர் வேலுச்சாமி (65). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு நீண்ட நாட்களாக மூளைக்கு செல்லும் நரம்பில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வேலுச்சாமி மாடிப் படி ஏறும்போது தவறி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பார்த்திபன் (26) அளித்த புகா ரின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
யானை மிதித்து வனக் காவலர் பலி
சின்னாளப்பட்டி, ஏப்.13- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஆடலூர் பன்றிமலை யில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள் ளதால், வனத்துறை சார்பில் வேட்டைத் தடுப்புக் காவலரை நியமித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கன்னிவாடி வனச்சர கத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக பணிபுரியும் குய்யவ நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சுந்தரம் (56) என்பவர் செல்வாயன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை காட்டு யானைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூதாட்டி பலி
தேனி, ஏப்.13- பெரியகுளம் காந்திநகரைச் சேர்ந்த வர் பொன்னுத்தாய்(60). பெரியகுளம் நஞ்சாபுரம் வாய்க்கால் பகுதியில் கீழே விழுந்து கிடக்கும் இலவம் பஞ்சு காய் களை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி உயி ரிழந்தார்.
மதுரையில் பெய்த மழை அளவு
மதுரை, ஏப். 13- மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதனன்று பெய்த மழை நிலவரம். (மி.மீ) சிட்டம்பட்டி - 5.40, கல்லந்திரி - 6.80, சாத்தையார் அணை - 50.00, வாடிப்பட்டி - 41.00, திருமங்கலம் - 1.00, உசிலம்பட்டி - 48.00, மதுரை வடக்கு - 31.60, தல்லாகுளம் - 32.00, விரகனூர் - 7.00, விமான நிலையம் மதுரை - 15.80, இடையபட்டி - 0.00, புலிப்பட்டி - 0.00, சோழவந்தான் - 51.40, மேட்டுப் பட்டி - 38.00, குப்பணம்பட்டி - 23.00, கள்ளிகுடி - 26.30, பேரையூர் - 5.40, ஆண்டிபட்டி - 47.80,
மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
கடமலைக்குண்டு, ஏப்.13- கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேக மலை அருவி அமைந்துள்ளது. இங்கு போதிய அளவில் மழை இல்லாததால் அருவியில் மிக குறைந்த அளவிலான நீர்வரத்து மட்டுமே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்க ளாக மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வரு கிறது. இதனால், புதனன்று மாலை யில் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப் பட்டது. நீர்வரத்து அதிகரித்துள்ள தால் வரும் நாட்களில் மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக சின்னமனூர் காவல்நிலையத்தில் நூலகம்
தேனி, ஏப்.13- தமிழகத்தில் முதன்முறையாக சின்னமனூர் காவல் நிலையத்தில் நூலகம் துவக்கப்பட்டுள்ளது. சின்னமனூர் காவல் நிலையத்தில் புதிதாக நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் போடி காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ், ஆய்வாளர் சேகர், சார்பு ஆய்வாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் அதற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்கள், வரலாற்று நிகழ்வு குறித்த புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. நூலகம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதைத் தவிர நூலகத்திற்கு வருகின்ற இளைஞர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் போலீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்றும் பயிற்சிகளும் நடத்தப்பட உள்ளது.