பிரேசிலியா, செப்.16- வேலைவாய்ப்புப் பிரச்சனை பிரேசில் நாட்டு இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், அரசுதான் வேலைக்கு உத்தரவாதம் தர வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் லூலா டி சில்வா கருத்து தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அக்டோ பர் 2 ஆம் தேதியன்று புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல் சுற்றுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி யும், இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் லூலா டி சில்வாவும், தற்போதைய ஜனாதிபதி போல்சானாரோவும், இன்னும் பல வேட்பாளர் களும் களத்தில் இருக்கிறார்கள். கருத்துக் கணிப்புகளின்படி, முதல் சுற்றிலேயே லூலா வெற்றி பெற்று விடுவார் என்று சொல்லப்படு கிறது. தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் வேலைவாய்ப் பின்மை பற்றி மக்கள் மத்தியில் விவாதம் எழுந்திருக்கிறது. இதில் தனது கருத்தை லூலா மிகவும் வலுவாகப் பதிவு செய்துள்ளார். இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவதற்கான உத்தரவாதம் அரசின் பொறுப்புதான் என்று கூறியதோடு, அதில் புதிய பாத்திரத்தை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தகைய பாத்தி ரத்தை அரசு ஏற்றுக் கொள்வது என்பதை நாம் விவாதிப்பது அவசியம் என்றார். தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று சில வல்லுநர்கள் சொல்வதற்கும் லூலா விளக்கமளித்துள்ளார். அதுபற்றிப் பேசிய அவர், “தொழில்நுட்ப வளர்ச்சிகள் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்லை. அது உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. அதிக செல்வத்தை உரு வாக்குகிறது. சில நபர்களின் கைகளில் செல் வத்தை கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது” என்று குறிப்பிட்டார்.