states

குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கினார்

அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற புதிய கட்சியைத் துவங்கியுள்ளார். புதிய கட்சிக்காக 1,500 பெயர்ப் பரிந்துரைகள் உருது மற்றும் சமஸ்கிருதத்தில் வந்தன. தற்போது இந்தியும் உருதுவும் கலந்த ‘இந்துஸ்தானி’யில் பெயர் சூட்டி யுள்ளோம். (ஜம்மு மற்றும் காஷ்மீரில்) தேர்தல் எப்போது  வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், கட்சியை பதிவு செய்வதே எங்கள் முன்னுரிமை. அது தொடர்பான ஏற்பாடுகள் விரைவில் தொடரும் என்றும் ஆசாத் பேட்டி அளித்துள்ளார்.

;