states

கனிம வளக் கொள்கை வகுக்க அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

சென்னை, செப்.14- குவாரி நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்த கனிம வளக் கொள்கை வகுக்க  வேண்டும்என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கரூரில் சட்டவிரோதக் குவாரிக ளுக்கு எதிராகவும் இயற்கை வளங் களைப் பாதுகாக்கவும் போராடிய ஜெகநாதன் என்பவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இச்சம்பவத்தை பூவுலகின் நண்பர் கள் சார்பில் வன்மையாகக் கண்டிக் கிறோம். அண்மைக் காலமாக இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் சுற்றுச் சூழல் விதிகளின் படி தொழில்கள் நடக்கிறதா என்பதை கண்காணிப் பதிலும் பொதுமக்களின் பங்கு  அதிகரித்து வருகிறது. இப்படியான  சூழலில் சட்டவிரோத செயல்பாடுக ளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொலை செய்யப் படுவதும் இயற்கை வளப் பாதுகாப் பில் ஈடுபடும் அனைவரையும் அச்ச உணர்வில் தள்ளும். கரூர் ஜெகநாதன் கொலை சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளரை காவல்துறை கைது செய்துள்ளது. இக்கொலையில் தொடர்புடைய அனைவரையும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்து, இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி கொலை யாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் பல்வேறு வகை யான கனிமங்களை வெட்டி எடுக்கும்  நடவடிக்கைகளுக்கான அனுமதி கோருதல், விண்ணப்பங்கள் பரி சீலனை, அனுமதிகள் வழங்குவது, விதிகளை பின்பற்றுவது போன்ற தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எது வும் அரசுத் தளங்களிலோ, பொது வெளியிலோ கிடைப்பதில்லை. இதனால் குவாரிகள் சம்பந்தமான அத்தனை செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை தொடர்வதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகவே தகவல்களைப் பெற முடிகிறது. அந்தச்  சட்டத்தின் வாயிலாக தகவல்கள் கேட்பவர்களின் விபரங்கள் கூட சில  தவறான அதிகாரிகளால் வெளியிடப் பட்டு அவர்கள் மிரட்டலுக்கு ஆளா கின்றனர். தென்மாவட்டங்களில் குவாரிகள் செயல்படும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாதார ணமாக நுழையவே முடியாத சூழலும்  நிலவுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கல் குவாரிகள், செங்கல் சூளைகள், ஆற்று மணல் குவாரிகள் தொடர்பான அனைத்து அனுமதிகளையும், ஆணைகளையும் அரசுத் தளங்களில் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, இத்திட்டங்கள் மீதான பொதுமக்கள் கண்காணிப்பும் அதிகரிக்கும்.

கனிம வளங்கள் எடுக்கப்படும் குவாரிகளைக் கண்காணிப்பதற்காக தற்போது இருக்கும் சட்டங்களில் பல்வேறு போதாமைகள் இருப்ப தைக் காண முடிகிறது. இதன் காரண மாகவே பெரும்பாலான குவாரிகளில்  விதிமீறல் நடக்கிறது. சில மாதங்க ளுக்கு முன்பு கூட நெல்லை மாவட்டம்  அடைக்கலாபுரத்தில் நடந்த  குவாரி விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரே சட்ட விரோதமாக  இயங்கி வந்த 50க்கும் மேற்பட்ட  குவாரிகளுக்குத் தடை விதிக்கப் பட்டன. மேலும் தமிழ்நாட்டின் கனிம வளத் தேவையைப் பூர்த்தி செய்வதைத் தாண்டி சில தனியாரின் வணிக, லாப நலனுக்காக அனைத்து உயிர்களுக்கும் சொந்தமான கனிம வளங்கள் அண்டை மாநிலங்களின் தேவைக்காக அழிக்கப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டிற் கான கனிம வளக் கொள்கை வகுப்பது  மிகவும் அவசியம். இக்கொள்கை மூலம் தமிழ்நாட்டின் கனிம வளத்  தேவை கணக்கிடப்பட்டு, தேவைக் கேற்ப மட்டும் கனிம வளங்களைப் பெறும் வகையில் குவாரிகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் அரசைக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.