புதுதில்லி, ஜூலை 18 - இந்தியாவில் தற்போதைய நிலை யில், 29 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கும் நிலையில், இந்தியாவை 75 மாநிலங்களாக உரு வாக்க வேண்டும் என்று ஆபத்தான கோரிக்கையை காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கடோல் சட்டப்பேரவை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வுமான ஆஷிஷ் தேஷ்முக், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு 4 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இன்று 29 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக 4.90 கோடி மக்கள் உள்ளனர். அமெரிக்கா வில் 50 மாநிலங்களில் 65 லட்சம் மக்களும், சுவிட்சர்லாந்தில் 26 மண்டலங்களில் 33 லட்சம் மக்களும் உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டி யுள்ள சிறிய மாநிலங்கள் வேகமாக முன் னேறி வருகின்றன. இருப்பினும் விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங் கள் அடங்கிய பகுதி) போன்ற வளமான பகுதி இன்னும் அடிப்படை வசதிகளுக் காக போராடி வருகிறது. புதிதாக உரு வாக்கப்பட்ட சிறிய அண்டை மாநிலங்கள் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்கு தல், அதிகரித்த நீர்ப்பாசனம், சுகாதார வசதிகள், கல்வி, சட்டம் ஒழுங்கு, சாலை கள், குழாய் நீர், வாழ்க்கை தரம், ஏராள மான மின்சாரம் மற்றும் மாற்று வேலை கள் உள்பட பலதரப்பட்ட முன்னேற்றங்க ளை அனுபவித்து வருகின்றன. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பெரும்பாலான வளர்ச்சி குறி காட்டிகளில் இது கீழே இருந்து மூன்றா வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்தியாவுக்கு சிறிய மாநிலங்கள் தேவை என்பதை இது நிரூபிக்கிறது. பாஜக-வின் கொள்கை சிறிய மாநிலங்க ளுக்கு ஆதரவாகவே உள்ளது. எனவே 30-ஆவது மாநிலமாக விதர்பா உருவாக் கத்துடன் ‘75@75’ (75வது சுதந்திர தினத்தில் 75 மாநிலங்கள்) என்ற கருத்தை தொடங்க வேண்டும் என்பது ஒரு தாழ்மையான வேண்டு கோள். மேலும் இது தொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று நாட்டு மக்க ளுக்கு நீங்கள் ஆற்றும் உரையின் வாயி லாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.