states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு!

புதுதில்லி, அக். 2- செப். 15-ஆம் தேதி யுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இந்திய நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, 86.7 கோடி டாலா்கள் சரிந்து 59,303.7 கோடி டால ராக இருந்தது. செப்டம்பர் 22-ஆம் தேதியுடன் முடி வடைந்த வாரத்தில் மேலும், 233.5 கோடி டாலா்கள் சரிந்து, 59,070.2 கோடி டால ராக சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பத ற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால், அதில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பொருந்தாது

சென்னை, அக். 2 - இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி இடஒதுக்கீடு என்பது சிறு பான்மை கல்வி நிறுவனங்க ளுக்கு பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காந்தி பிறந்த நாள்: முதல்வர் மரியாதை

சென்னை, அக்.2-  காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி,  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில்,   பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், காந்திய டிகள் சிலைக்கும், உருவப்படத் திற்கும் மலர் தூவி மரியாதை செலுத் தப்பட்டது. மேலும், கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

பரந்தூரில் 138 பேர் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம், அக்.2- பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிய 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சென்னை யின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க ஒன்றிய- மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பரந்தூர் புதிய  விமான நிலையம் அமையும் பட்சத்தில்  முழுவதும் கையகப்படுத்தப்பட உள்ள  ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான  நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 433 நாட்களாக இரவு  நேரங்களிலும் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் புதிய விமான நிலை யத் திட்டத்தில், நீர் நிலைகள் பாதிக்கப்படு வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திர நாதன் தலைமையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு இரண்டாவது முறை யாக பரந்தூர் விமான நிலையம் அமைய  உள்ள பகுதிகளில் ஆய்வு செய்ய வந்த னர். இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஏகனாபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும்  விமான நிலைய எதிர்ப்புக் கூட்டமைப்பு குழுவினர், அம்பேத்கர் சிலை அருகே பரந்தூர் - கண்ணந்தங்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை  காவல்துறையினர் கைது செய்து பின்னர்  விடுவித்தனர். அவர்கள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மறியலில் ஈடுபட்டவர்க ளின் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை மாநில அரசு திரும்பப்பெற வேண்டு  மென்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.

தங்கம் விலை  ரூ.32 குறைந்தது'

சென்னை, அக்.2- சென்னையில் ஆபரணத் தங்கத்தின்  விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.42,848-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,356-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் ஒரு கிரா முக்கு 50 காசுகள் குறைந்து ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

சென்னை, அக்.2- தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாண வர்கள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடு முறை பல்வேறு கட்டங்க ளாக விடப்பட்டது. மிலாடி  நபி, காந்தி பிறந்த தினம் விடு முறையை மையமாக வைத்து காலாண்டு விடு முறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாண வர்களுக்கு 10 நாட்களும்  அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு 5 நாட்களும் விடு முறை வழங்கப்பட்டது. காலாண்டு விடுமுறை அக்.2 ஆம் தேதியுடன் முடிந்தது. செவ்வாயக் கிழமை (அக்.3) அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளிகள் திறக்கப் படுகின்றன.

பெண் தலைமை காவலர்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐ பதவி உயர்வை எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை, அக்.2- கடந்த 1991ஆம் ஆண்டு முதல்  நிலை பெண் காவலர்களாக பணி யில் சேர்ந்தவர்கள், தலைமைக் காவலராக 10 ஆண்டுகள் பணியை முடிக்காமல் சிறப்பு உதவி ஆய் வாளர்களாக 2011ஆம் ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால், 201ஆ1ம் ஆண்டு  நேரடியாக உதவி ஆய்வாளர்  களாக தேர்வு செய்யப்பட்ட வர்கள், தங்களை விட பணி மூப்பு  பட்டியலில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மூத்தவர்களாக உள்ளதால் தங்களது பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், 10 ஆண்டுகள் தலைமை காவலர்களாக பணியை முடிக்காதவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கிய 2011ஆம் ஆண்டு அரசாணையை ரத்து செய்ய கோரியிருந்தனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ் குமார், 12 ஆண்டுகளுக்கு முன்  பிறப்பிக்கப்பட்ட அராசணையை ரத்து செய்யக் கோரி காலதாமத மாக வழக்குத் தொடர முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 1990 - 91ஆம் ஆண்  டுக்கு பின், நேரடியாக முதல்நிலை  பெண் காவலர்கள் பதவிக்கு தேர்வு நடத்தப்படவில்லை என்ப தாலேயே, ஒருமுறை நடவடிக்கை யாக முதல் நிலை பெண் காவ லர்களான இவர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை அரசு  வழங்கியுள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தற்போது, இவர்களுக்கு ஆய்  வாளர் பதவி உயர்வு வழங்க  அரசுக்கு டி.ஜி.பி., கடந்த ஆண்டு  பரிந்துரை செய்துள்ளதை சுட்டிக்  காட்டிய நீதிபதி, இந்த பதவி  உயர்வு விவகாரத்தில் 1995ஆம்  ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு  வரை தமிழ்நாடு அரசு உள்துறை யில் பல்வேறு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த அரசாணைகளை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. அதனால், அந்த அரசாணையின்படி வழங்  கப்பட்ட பதவி உயர்வுகளை எல்  லாம் மீண்டும் பரிசீலிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.