சென்னை, அக்.22- வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கார ணமாக, தமிழகத் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு, கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்று க்கிழமை முதல் மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. இதையடுத்து, கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், கடலூர் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், தங்கள் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி, நாகப்பட்டினம், பாம்பன், இராமேஸ்வரம், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் 1 -ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 25 வரை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதி கள், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை பகுதிகளில் அக் டோபர் 23-ஆம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.