states

புதுச்சேரியில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, செப். 19- தீவிரமாக காய்ச்சல் பரவு வதால் புதுச்சேரி, காரைக்காலில் 215 குழந்தைகள், பெரியவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக் கப்பட்டுள்ளனர். வெளிப்புறப் பிரிவில் 559 பேருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஃப்ளூ காய்ச்சல் தீவிரமாக பரவி வரு கிறது. இந்தக் காய்ச்சல் குழந்தை களை அதிகளவில் பாதிக்கிறது. இதனால், கல்வித் துறை புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8 ஆம்  வகுப்பு வரை பள்ளி களுக்கு வரும் 25 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. அரசு  மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளும் செய்யப்பட் டுள்ளன. நாள்தோறும் காய்ச்ச லால் அவதிப்பட்டு சிகிச்சை வரு வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரி அரசு மருத்துவ மனை, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நலமருத்து வமனையில்அதிகளவு கூட்டம் இருந்தது. ராஜீவ்காந்தி மகளிர் மற்றும்குழந்தைகள்நல மருத்து வமனையில் குழந்தைகளுடன் பெற்றோர் குவிந்திருந்தனர். காய்ச்சல் குறைவாக இருந்த குழந்தைகளுக்கு மருந்து கள் அளிக்கப்பட்டு அனுப்பப் பட்டனர். கடுமையாக பாதிக்கப் பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் அரசு மருத்து வமனையில் வயதானவர்கள் பல ரும் சிகிச்சைக்காக வந்தி ருந்தனர். இதேபோல அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், சமுதாய நல வழி மையங் களிலும் காய்ச்சலால் பாதிக்கப் பட்டோர் அதிகளவில் வந்த தால் கூட்டம் அலைமோதியது. காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

;