காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிரைக் காப்பாற்ற காவிரி நீரை முழுமையாகப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் பயிர்கள் கருகி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோ ருக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நஷ்ட ஈடு வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்துக்கு உரிய நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு லட்சக்கணக்கான பயிர்கள் கருகிப் போய், விவசாயிகள் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு ள்ளார்கள். கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு 65,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், வெறும் 12,000 கன அடி நீர் கர்நாடக அரசால் வெளி யேற்றப்படுவது நியாயமற்ற செயல் என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பாலான விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிட்டுவிட்டார்கள். இந்த ஆண்டு 92,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திருவாரூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள பெரிய ஆறுகளில் தேவையான அளவுக்கு நீர் வராததன் காரணமாக இந்த இலக்கை எட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் சில நாட்களாக மழை பெய்து வருவ தால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வந்தாலும் கருகிய பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடாததன் காரணமாக பயிர்கள் கருகி யுள்ளதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அர சுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்க னவே குறுவைக்கு காப்பீடு இல்லாத நிலை யில் போதிய நீர் இல்லாமல் கருகும் பயிர் கள் குறித்து அரசு உரிய கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்
என்றும் கோரு கின்றனர். கர்நாடக மாநிலத்தில் கனமழை தொ டரும் நிலையில் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகி இப்போது அணை களில் 95 சதவீதம் அளவுக்கு உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த அளவான 124.8 அடியில் இப்போது 100 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல கபினி அணையில் மொத்த அளவான 65 அடியில், 61.51 அடி தண்ணீர் உள்ளது. ஹேரங்கி அணையில் மொத்தம் உள்ள 129 அடியில் 123.05 அடி தண்ணீர் உள்ளது. ஹேமாவதி அணையில் மொத்தம் உள்ள 117 அடியில் 101.25 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி ஜூன், ஜூலை மாதம் கர்நாடக அணை யில் இருந்து 40 டிஎம்சி தண்ணீர் விடுவிக்க வேண்டிய நிலையில் உடனடியாக இந்த தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் போதிய அழுத்தம் தர வேண்டும். இன்னொருபுறம் ஒன்றிய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அரிசி தட்டுப்பாட்டினை தவிர்க்க எடுத்துள்ள முடிவாக இருந்தாலும், அரிசி உற்பத்தியை அதிகரிக்க என்ன நடவடிக்கை ஒன்றிய அரசு எடுத்துள்ளது என்ற கேள்வி விவ சாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. அரிசி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டாவில் உள்ள தண்ணீர் பிரச்ச னையை ஒன்றிய அரசு எப்போது கண்டுகொள் ளும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆரூரான்