புதுதில்லி, செப். 21 - பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கோதுமைக்கு ஒன்றிய பாஜக அரசு விதித்த சந்தைக் கட்டுப் பாடுகளால், விவசாயிகளுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற் பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) மதிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய சந்தைக் கட்டுப்பாடுகள், வரவிருக்கும் கொள்முதல் பருவத்தில் நெல் விவ சாயிகளையும் இதேபோன்ற இழப்பிற்கு தள்ளக்கூடும் என்று என்று எச்சரித்துள்ள சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், ஏற்கெனவே, பருப்பு மற்றும் வெங்காய விவசாயிகளுக்கும் இதே போன்ற கட்டுப்பாடுகளால் இழப்பைச் சந்தித்து வருவதாகவும் தெரி வித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் நாட்டில் மொத்தம் 112 மெட்ரிக் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது. 2023-24 ராபி பருவத்தில், ஒரு குவிண்டால் கோது மைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) 2 ஆயிரத்து 125 ரூபாயாக இருந்தது. இதுவே வெளிச்சந்தையில் ஒரு குவிண்டால் 2 ஆயிரத்து 673 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சாகுபடிச் செலவை விட விலை குறைவு
2023 பிப்ரவரியில் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தை (டீஆளுளு) ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. உள்நாட்டில் விலையை நிலைப் படுத்தும் நோக்கத்துடன் குவிண்டா லுக்கு 150 ரூபாய் ஆதரவு விலை அறி வித்தது. எனினும், கோதுமை சாகு படிக்கு விவசாயிகள் மேற்கொண்ட செலவைக் காட்டிலும் குறைவாகவே, அரசாங்கம் நிர்ணயித்த விலை இருந்தது. குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயி ரத்து 125 மட்டுமே கிடைத்தது.
குவிண்டாலுக்கு 548 ரூபாய் இழப்பு
ஆனால், அரசாங்கம் விவசாயி களின் கோதுமைச் சந்தையில் தலை யிடாமல் இருந்திருந்தால், அவர் களுக்கு ஒவ்வொரு குவிண்டாலுக்கும் 548 ரூபாய் விகிதம் கூடுதல் விலை- அதாவது குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயி ரத்து 673 கிடைத்திருக்கும். பணவீக்க த்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் அது தடுக்கப்பட்ட தால், நாடு முழுவதும் கோதுமை விவ சாயிகள் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) தெரிவித்துள்ளது.
அரசின் கொள்கைக்காக விவசாயிகள் பலி
உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தும் வர்த்தகக் கொள்கையை அர சாங்கம் நியாயமான முறையில் பயன் படுத்த வேண்டும் - விவசாயிகளின் வரு வாயைப் பாதிக்காமல் அதைச் செய்ய வேண்டும் என்றும் ஐசிஆர்ஐஇஆர் பரிந்துரைத்துள்ளது. ஐசிஆர்ஐஇஆர் அமைப்பின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, “சந்தைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை யும், சாகுபடியாளர்களிடமிருந்து நுகர் வோருக்கு வளங்களை கணிசமான அளவில் மாற்றும் விஷயத்தில், விவ சாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்து வதாகவும் ‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ தெரிவித்துள்ளது.