states

திருப்பூர் தொழிலை பாதுகாக்க மீட்புத் திட்டம் அறிவியுங்கள்

சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு  என்.பி.ஏ. விதியை தளர்த்துக!

அத்துடன் இன்றைய சூழ்நிலை யில், “என்பிஏ” எனப்படும் செயல்  படாத சொத்தாக வங்கிக் கணக்கு களை முடக்குவதற்கான விதிமுறை களையும் தளர்த்த வேண்டும். கடனை செலுத்துவதற்கு கொடுக்கப்பட்டி ருக்கும் காலக்கெடு 90 நாட்களைக்  கடந்தால் என்பிஏ பட்டியலில் இணைப் பதை தற்போதைக்கு தளர்த்த  வேண்டும் என ரிசர்வ் வங்கியின்  ஆளுநர் சக்திகாந்த தாஸிற்கும் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்றுமதிக்கான பண வரவு-செலவுக்கு நிர்ணயிக்கப்  பட்டிருக்கும் காலக்கெடு அளவை யும் சற்று அதிகரிக்கும்படி ராஜா சண்  முகம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்  தப்பட்ட அனைத்து வங்கிகளின் தலைவர்கள், நிர்வாக இயக்குநர் கள், அமலாக்க அதிகாரிகளுக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூர் தொழில் சந்தித்து வரும் இன்றைய எதார்த்த சூழ்நிலையை அவர்களுக்கு விளக்கி சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு, என்.பி.ஏ. விதிமுறையைத் தளர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டி ருப்பதாகவும் ராஜா எம்.சண்முகம் தெரிவித்துள்ளார். சிறு, குறு, நடுத்தரத் தொழில்க ளைப் பாதுகாக்கவும், வேலை வாய்ப்பைப் பாதுகாக்கவும் ஒன்றிய  அரசும், ரிசர்வ் வங்கியும் தனது  கோரிக்கைகளை பரிசீலித்து நட வடிக்கை எடுக்க முன்வருவார்கள் என்று நம்புவதாகவும் ராஜா எம்.சண்முகம் கூறியுள்ளார்.

திருப்பூர், செப்.24-  திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையைப் பாதுகாக்க மீட்புத் திட் டத்தை அறிவிக்கும்படி ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும்  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  ஆகியோருக்கு திருப்பூர் ஏற்றுமதியா ளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அவசர கால கடன் உத்த ரவாதத் திட்டத்தின்கீழ், தற்போதுள்ள கடன் தொகை அளவில், 20 சதவிகி தம் கடன் தொகையை, மீட்புத் திட்டமாக வழங்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம். சண்முகம் கோரியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸுக்கும் சனிக்கிழமை திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது பணப் பிரச்ச னையில் சிக்கித் தவிக்கின்றன. வெளி நாட்டு ஆர்டர்கள் கிடைப்பது குறைந்து விட்டது, அனுப்பிய ஆர்டர்களுக்கு உரிய பணம் தருவதும் தாமதம் ஆகி றது, ஏற்கெனவே ஒப்புக் கொண்ட ஆர்டர்களையும் தற்போது பெற்றுக்  கொள்ள மறுக்கின்றனர். கப்பலில்  அனுப்பும் சரக்குகளை பெற்றுக் கொள்  வதையும் தள்ளிப் போடுகின்றனர். இந்த காரணங்களால் திருப்பூர் பின்னலா டைத் தொழில் மிகக்கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கொரோனா கால நெருக்கடி மற்றும்  பருத்தி நூல் விலை உயர்வு ஆகிய இரட்டைத் தாக்குதலில் இருந்து மீள்வ தற்காக, திருப்பூர் ஏற்றுமதி பின்ன லாடை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் சக்திக்கு மீறி போராடிக் கொண்  டிருக்கின்றன. அத்துடன் ரஷ்ய - உக் ரைன் போரின் பின்விளைவுகள், அமெ ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சந்தைகள் மிகவும் மோச மடைந்து கொண்டிருக்கின்றன. அதன் பாதிப்புகளையும் திருப்பூர் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த இக்கட்டான நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோருவதாக நிர்மலா சீத்தாராமனுக்கு எழுதிய கடி தத்தில் ராஜா சண்முகம் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

;