சென்னை,ஜூலை 7- கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) விஜய குமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜூவால் விளக்கம் தெரிவித் துள்ளார். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைவர் (டிஜிபி) சங்கர் ஜூவால் விளக்கம் அளித்துள்ளார். அதில், கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்த விஜயகுமாருக்கு ஐ.ஜி. சுதாகர், இரு நாட்களுக்குமுன்பு தான் கவுன்சிலிங் அளித்துள்ளார். அவர் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு அலுவல் பிரச்சனை காரணம் இல்லை. இது குறித்து ஐ.ஜி. சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.