சென்னை, அக். 10- தமிழகத்தின் ஒரே ஒரு பாதுகாப்புத் துறையின் ராணுவ உடைத் தொழிற்சாலையை பாது காக்க வேண்டும் என அகில இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர் சம்மேளனம் பாதுகாப்பு அமைச்ச ருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: 1961ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ணமேனன் மற்றும் அன்றைய தமிழக முதலமைச்சர் காமராஜர் ஆகியோரின் சீரிய முயற்சியினால் உருவாக்கப்பட்டது ஆவடி படைத் துறை உடைத் தொழிற்சாலை. 62 ஆண்டுகளாக முப்படைகளுக்கும் தேவையான அனைத்து விதமான சீருடைகள், பாதுகாப்பு கவச ஆடைகள், டெண்டுகள், பாராசூட்டு கள் உட்பட ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. 2021ஆம் ஆண்டு இந்த தொழிற் சாலை உட்பட 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளையும் ஒன்றிய அரசு கார்ப்பரேஷனாக தொழிற் சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி மாற்றியது. அப்போது, இந்த தொழிற் சாலைகளுக்கு போதுமான பணிகள் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், வாக்குறுதிகளை மீறி சுமார் 11 லட்சம் புதிய ராணுவ சீருடை கள், தனியாரிடம் தாரை வார்க்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிகள் ஒருசில பெரிய தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என சந்தேகப்படுகிறோம். காரணம், இந்த ஒப்பந்தத்தில் ஆவடி படைத் துறை உடைத் தொழிற்சாலை உட்பட எந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனமும் கலந்து கொள்ள முடியாது. துணியையும் உற்பத்தி செய்து அந்த நிறுவனமே ஆடை யையும் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிற் சாலைகள் மட்டுமே உள்ளன. இந்த ஒப்பந்த அறிவிப்பு அவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும். சட்டத்திற்குப் புறம்பான ஒப்பந்த அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், 700க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உட்பட 1,400 தொழிலாளர்கள் பணி புரிகின்ற ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலைக்கு கடந்த காலங்களில் வழங்கி வந்ததைப் போல் மேற்கண்ட ராணுவ சீருடை யையும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும். படைத்துறை தொழிற்சாலைகள் அரசிடமே இருக்கும் எனும் வாக் குறுதியை புறந்தள்ளி இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை தனி யாரிடம் தாரை வார்க்கின்ற ஒன்றிய அரசின் கொள்கை திரும்பப் பெற வேண்டும். இல்லை எனில் அனைத்து படைத்துறை தொழிற் சாலை தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். எனவே தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு பாதுகாப்புத் துறையின் ராணுவ உடைத் தொழிற்சாலையை பாது காப்பு துறை அமைச்சர் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.