states

தீக்கதிர் விரைவு செய்திகள்

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க  பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 30-க்குள் மாணவர்கள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவ அறி வுறுத்தப்பட்டுள்ளது. 2023-24 ஆம் கல்வியாண்டில் “நான் முதல்வன் திட்டம்” சார்ந்து அரசு  மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்பதால் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

வலைகளை அறுத்தெறிந்து மீனவர்கள் விரட்டியடிப்பு

இராமேஸ்வரம், ஜூலை 18-  இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திலிருந்து திங்கட்கிழமை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்ற னர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை யினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலை களை கடலில் வெட்டிவிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை நிறுத்திட இலங்கை அரசுடன் ஒன்றிய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கொல்லம் ரயில் சிவகாசியில் நிற்கும்

சென்னை, ஜூலை 18- சென்னை எழும்பூர் – கொல்லம் இடையே இயக்கப்  படும் விரைவு ரயில், வரும் ஜூலை 27 முதல் விருது நகர் மாவட்டம் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று  செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள் ளது. சென்னை - கொல்லம் ரயில் சிவகாசியில் நின்று செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறி விப்பை பயணிகள் வரவேற்றுள்ளனர்.

‘பாஜகவுக்கு இனி தூக்கம் வராது’

“தேசிய ஜனநாயக கூட்டணி முன்பு இருந்ததைப் போல் தற்போது வலுவாக இல்லை. கடந்த சில ஆண்டு களில் ஒன்பது பெரிய கட்சிகள் கூட்டணி உறவை முறித்துக் கொண்டன. எதிர்க்கட்சித் தலைவர்களின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு பாஜகவுக்கு இனி தூக்கம் வராது” என ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா பேசியுள்ளார்.

பொன்முடியுடன் முதலமைச்சர்  தொலைபேசியில் பேச்சு

சென்னை,ஜூலை 18- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றுள்ளார். இந்த நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வீடு அவரது மகன் மருத்துவர் கவுதம சிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங் களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்களன்று(ஜூலை 17) காலையில் இருந்து சோதனை நடத்தினர். அமைச்சர் பொன்முடியை அரும் பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று  செவ்வாயன்று (ஜூலை 18) அதிகாலை  3 மணி வரை விசாரணை மேற்கொண்ட னர். இந்த நிலையில், மீண்டும் விசார ணைக்கு ஆஜராகும்படி சம்மன் வழங்கி உள்ளனர். இந்த நிலையில், அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை செல்பேசியில் கேட்டறிந்த முதலமைச்சர்,“ துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர் கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து  நின்று முறியடிக்க தார்மீக ரீதியாக வும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும்  திமுக என்றும் துணை நிற்கும்.” இவ்வாறு பொன்முடியிடம் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பொது மாறுதல்  தடை நீக்கம்

சென்னை,ஜூலை 18-  அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடையை நீக்கி தமிழ்நாடு அரசு  உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், அரசு அதிகாரிகள் விமான பயணம் மேற் கொள்ள இருந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல்  அதிகரித்து வந்த காலத்தில் நிதிச்  சுமையை குறைக்க அரசு அதிகாரி களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது. 2020-21 ஆண்டு காலகட்டத் தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகளின் செலவை 50 விழுக் காடு தமிழ்நாடு அரசு குறைத்தது.

5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 18- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 24 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித் துள்ளது. வடக்கு கர்நாடக கடலோரப் பகுதி களில் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்: டி.கே.எஸ். இளங்கோவன் 

சென்னை, ஜூலை 18- அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித் துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் க. பொன் முடியுடன் மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு. ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, சி.வி.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் திமுக மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், ரவிக்குமார் (விசிக) ஆகியோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகை யில்,“அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை. அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைப்பாவையாக உள்ளது”என்றார்.  ஒன்றிய அரசின் நடவடிக்கை முற்றிலும் தவறான நடவடிக்கை என்றும் பொன்முடிக்கு எந்த அச்சமும் இல்லை; சட்டப்படி எதிர் கொள்வார். மடியில் கனம் இல்லாததால் அமலாக் கத்துறை நடவடிக்கையை எதிர்  கொள்ள பொன்முடி தயாராக உள்ளார் என்றும் குறிப்பிட்டார் டி.கே.எஸ்.இளங்கோவன்.

உலகச் செய்திகள்

சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் கிரிஸ் ஹிப்கின்ஸ் வலியுறுத்தி உள்ளார். பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த மாதத்தில் தான் மேற்கொண்ட சீனப்பயணம் பெரும் பலனளித்ததாக அவர் கூறியுள்ளார். 

சிரியாவின் அரசுக்கு எதிரான சதி வேலைகளில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. சிரியாவில் போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அந்நாட்டின் கிழக்குப் பகுதி மாகாணமான டெய்ர் அல் சோரில் அமெரிக்கப் படைகளும், தீவிரவாதிகளோடு கைகோர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈரானுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவை மேலும் விரிவுபடுத்தவே அஜெர்பைஜான் விரும்புகிறது என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷாகின் முஸ்தபவேவ் கூறியுள்ளார். டெஹ்ரானில் உள்ள அஜெர்பைஜானின் தூதரகம் மீது தாக்குதல் நடந்ததால் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளைத் தாண்டி தங்கள் உறவு தொடர்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

;