states

இந்தோனேசிய இணையச் சந்தையை கைப்பற்றிய எலான் மஸ்க்

பாலி,மே 20- உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்ட நாடான இந்தோனேசியாவில் எலான் மஸ்க் - இன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் இணைய சேவை துவங்கப்பட்டுள்ளது. டென்பசார் நகரில் நடைபெற்ற ஸ்டார்லிங்க்  இணைய சேவை துவக்க நிகழ்ச்சியில் இந்தோ னேசிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் புடி ஆரி, கடல்சார், மீன்வளத்துறை அமைச்சர் சக்தி வஹ்யு ட்ரெங்கோனோ, சுகாதாரத்துறை அமைச்சர் சாதிக்கின் ஆகியோருடன் இணைந்து எலான் மஸ்க் துவக்கி  வைத்தார்.  அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மஸ்க், மிகப்பெரிய தீவுநாடான இந்தோ னேசியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் இணைய தேவையை பூர்த்தி செய்ய ஸ்டார் லிங்க் சேவை உதவும் என்றார். மேலும் பேசிய அவர், உயர் அலைவரிசை இணைப்பு இந்தோ னேசியாவில் உள்ள அனைத்து கிராமப்புற தீவிற்கும், தொலைதூர தீவுகளுக்கும் இணைய சேவையை கொண்டு சேர்க்கும் என்று கூறினார். இந்த சேவை தடையற்ற கற்றல், தேடல்கள் மற்றும் இணையம் சார்ந்த பல தேவைகளை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு உதவும் என்றார்.  மக்கள் இணையத்துடன் இணைக்கப் பட்டிருந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியும். இல்லை என்றால் கற்றுக்கொள்வது மிகவும் கடினம். இந்தோனேசியா போன்ற நாடுகளில் தொலைதூர கிராமத்தில் இருந்தா லும் உலகத்துடன் இணைக்கும் சில மெய்நிகர் சேவைகள் உங்களிடம் இருந்தால் போதுமா னது. இப்போது அறிமுகம் செய்துள்ள இணைய இணைப்பு மூலம் நீங்கள் உலகத்து டன் எளிதாக இணைய முடியும். இதனால் கிரா மப்புற சமூகங்களுக்கு நிறைய வளர்ச்சியை கொடுக்க முடியும் என்று தான் கருதுவதாகக் கூறினார்.   இது குறித்து  அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சாதிக்கின் பேசியபோது, தற்போது இந்தோனேசியாவில் மூன்று சுகாதார மையங்க ளில் இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் நாடு முழுவதும் உள்ள ஆயி ரக்கணக்கான சுகாதார மையங்களுக்கு ஸ்டார் லிங்க் அதிவேக இணைப்பைக் கொண்டு வரும். தொலைதூரப் பகுதிகளில் உள்ள இந்தோனேசி யர்கள் இதுவரை கிடைக்காத சேவைகளை இனிமேல் அணுக முடியும் என தெரிவித்தார்.   இணைய சேவை பெறுவதில் சிக்கல்க ளை எதிர்கொண்ட  2,700 சமூக சுகாதார மைய ங்கள் மற்றும்  இணைய சேவையே  இல்லாத 700 சமூக நல மையங்களும் இப்போது ஸ்டார்லிங்க் மூலம் இணைய வசதிகளை பெற முடியும். இந்த சேவையால் நகரங்கள் மற்றும் தொலைதூர சுகாதார மையங்களுக்கு இடை யேயான சேவைகளில் இடைவெளிகள் குறை யும் எனவும் தெரிவித்துள்ளார்.   ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்துள்ள மூன்றாவது தென்கிழக்கு ஆசிய நாடாக இந்தோனேசியா உருவாகி உள்ளது. முன்னதாக இந்தோனேசியாவின் அண்டை நாடான மலேசியா கடந்த ஆண்டு இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.  அதேபோல 2022 ஆம் ஆண்டே பிலிப் பைன்ஸை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

;