states

விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற எட்டுப் பேர் பலி

சண்டிகர், செப்.10- ஹரியானா மாநிலத்தின் பல்வேறு  பகுதிகளில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் மகேந்திரகர்  நகர் கனினா-ரேவாரி சாலையில் அமைந்துள்ள ஜகடோலி கிராமத்திற்கு அருகில் உள்ள கால்வாயில்   விநாய கரை கரைக்கச் சென்ற எட்டு பேர்   சிலையுடன் அடித்துச் செல்லப்பட்ட னர். அவர்களில் டிங்கு, ஆகாஷ், நிதின், நிகுஞ்ச் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 18 முதல் 23 வய துக்கு உட்பட்டவர்கள் ஆவர். மனோஜ்,  தீபக், சுனில், சஞ்சய் ஆகியோர் மீட்கப்  பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சோனிபட்டில் உள்ள மிமர்பூர் காட்  பகுதியில் யமுனை ஆற்றில் விநாயகர்  சிலையை கரைக்கச் சென்ற சுந்தர் சன்வாரி பகுதியைச்  சேர்ந்த சுனில் (45),  அவரது மகன் கார்த்திக் (13), மரு மகன் தீபக் (20) ஆகியோர் நீரில் மூழ்கி  பலியாயினர். சுனில் மற்றும் அவரது மருமகன் தீபக் ஆகியோரின் உடல்கள்  மீட்கப்பட்டன. சுனிலின் மகன் கார்த்திக்கை தேடும் பணி நடந்து வரு கிறது.  பேகா காட் நகரை அடுத்துள்ள ரெஹ்ரா பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர்  சுமித் (22) தனது நண்பர்கள் ஆறு பேரு டன் விநாயகர் சலையை கரைக்கச் சென்றார். அப்போது நீரில் மூழ்கி சுமித்  பலியானார். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா வை அடுத்துள்ள அபய்பூர் பகுதி யைச் சேர்ந்த  புஷ்பா  தனது மகளு டன் சென்று விநாயகர் சிலையை கரைத்துவிட்டு டிராக்டரில் வீடு திரும்  பிக்கொண்டிருந்தார். டிராக்டர் ஓட்டு நர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் புஷ்பாவும் அவரது மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி புஷ்பா உயி ரிழந்தார்.

;