states

கேள்வி நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

சட்டப்பேரவையில் தினமும் முதல்  ஒரு மணி நேரம் கேள்விநேர நிகழ்வு  நடைபெறும். இந்த கேள்வி நேரத்தின் போது பேசிய ஒட்டபிடாரம் திமுக  உறுப்பினர் சண்முகையா முதலமைச்சரை புகழ்ந்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “தான் எதிர்க் கட்சி வரிசையில் இருந்தபோதும், ஆளும்  கட்சியாக தற்போது இருக்கும்போதும், தொடர்ந்து வலியுறுத்துவது உறுப்பி னர்கள் கேள்வி நேரத்தை,கேள்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்னை  புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.