states

img

இந்தியாவுடன் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்ளத் தயார்

சேலம், செப்.9- இந்தியாவுடன் தொழில்நுட் பத்தை பரிமாறிக் கொள்ள கியூபா தயாராக உள்ளது என வேளாண்மை துறை சர்வதேச கருத்தரங்கில் அந் நாட்டின் துணை தூதர் ஆபேல் டெஸ் பெய்ஜின் தெரிவித்தார். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை துறை சார்பாக 5 ஆவது சர்வதேச கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில், பல் கலைக்கழக துணைவேந்தர் ஜெக நாதன் பேசுகையில், சேலம் பெரி யார் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோரை உருவாக்குவதற் கான அனைத்து வசதி வாய்ப்புக ளையும் வேளாண்மை துறை சிறப் பாக செயல்படுத்தி வருகிறது என் றார். அத்துடன், இக்கருத்தரங்கின் மூலம் வெளியிடப்படும் அனைத்து ஆய்வுக் கட்டுரைகளின் சிறப்புகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். தமி ழக அரசாங்கம் தொழில் முனை வோர்களுக்கு வழங்கி வரும் சலு கைகள், கடன் உதவிகள் பற்றிய விழிப்புணர்வு சிந்தனைகள் குறித் தும் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருத் தினராக கியூபா நாட்டின் துணை தூதர் ஆபேல் டெஸ்பெய்ஜின் கலந்து கொண்டு, கியூபா நாட்டின் தொழில் அனுபவத்தையும், தொழி லின் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும், இந்தி யாவிற்கும், கியூபா நாட்டிற்கும் உள்ள நட்புணர்வையும், இதன்  மூலம் நடைபெற்றுக் கொண்டுள்ள  ஏற்றுமதி தொழிலின் முக்கியத்து வத்தை பற்றியும் தெளிவாகக் கூறினார். கியூபா இந்தியாவோடு தொழில்நுட்பத்தை பரிமாற்றிக் கொள்வதற்கும், ஆராய்ச்சி சம்பந்த மான தகவல்களை மாணவ, மாண விகள் மற்றும் பேராசிரியர்களிடம் பரிமாற்றிக் கொள்வதற்கும் தயா ராக உள்ளது எனவும் தெரிவித் தார். மேலும், இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பொருளாதாரக் கல்லூரியின் இணைப்பேராசிரியர் தமிழரசு, கிருத்திகா பைப்ஸ் மேலாண்மை இயக்குநர் ராஜேஸ்வரன் சேலம் பெரியார் பல்கலைக்கழக மேலாண்மை துறையின் இணை பேராசிரியர் யோகானந்தன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;