states

மறு உடற்கூராய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த தனி யார் பள்ளி மாணவியின் உடலை மறுபிரேத பரி சோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவி யின் உடற்கூராய்வு தகுதியில்லாத மருத்து வர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி,  மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசா ரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார். இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

வழக்கு விசாரணையின் தொடக்கத்தி லேயே “நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? இந்த போராட்டத்தை நடத்த அனுமதித்தது யார்? மாணவியின் இறப்புக்கு காரணம் என்ன? தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று எப்படிக் கூறுகிறீர்கள்? நீங்கள் என்ன இந்த துறையில் நிபுணரா?” என்பது உள்பட  பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பினார். மேலும், இதுபோன்ற இயற்கைக்கு முர ணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய  வேண்டும். மறு பிரேத பரிசோதனையின் போது  மனுதாரர் தனது வழக்கறிஞருடன் இருக்க லாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை  ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள் ளது. கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் தொடர் பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

329 பேர் கைது

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிரா மத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி, சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்  நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி  12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலை யில், கடந்த 13 ஆம் தேதி மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்துவிட்டாக பள்ளியின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், மருத்துவ பிரேத அறிக்கையில் மாணவி உயிரிழப்புக்கு முன்பாகவே உட லில் ரத்த காயங்கள் இருந்ததாகவும், கை,  கால்கள் உடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள் ளது. இதனையடுத்து, மாணவர்களும், இளை ஞர்களும், பெண்களும் இரண்டு மூன்று நாட்க ளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனத்தால் வன்முறை வெடித்தது. காவல்துறையின் தாக்குதல் சம்ப வத்தால் போர்க்களமாக மாறியது. இந்த  சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின்  கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வீடியோ பதிவுகளை வைத்தும் 329 நபர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கலவரம் தொடர்பாக கைது  செய்யப்பட்டவர்களில் 108 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

மக்கள் அதிகாரம் அமைப்பு

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தில் ரூ.20 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. கலவர சம்பவத்தில் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியது, கலவ ரத்தை தூண்டியது உள்ளிட்ட மூன்று பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து மக்கள் அதி கார அமைப்பு செயலாளர் ராமலிங்கத்தை கைது செய்துள்ளனர்.

பள்ளியின் தாளாளர் கைது

மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து வன்முறை களமாக மாறிய அந்தப் பகுதிக்கு உள்துறைச் செயலாளர் பணீந்தர ரெட்டி, காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, கள்  ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்  டோர் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து  பள்ளியின் தாளாளர், முதல்வர், செயலாளர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அமைச்சர்கள் ஆய்வு

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,“சின்னசேலத்தில் அந்த தனியார் பள்ளி இயல்பு நிலைக்குத்  திரும்ப இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலா கும் என்பதால் அதுவரைக்கும் குழந்தை களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது” என்றார். பள்ளிக் கல்வித்துறையின் அனுமதி யில்லாமல் தனியார் பள்ளிகள் விடுமுறை விடக்கூடாது என்றும் அமைச்சர் எச்ச ரிக்கை விடுத்தார். இதற்கிடையில், முதலமைச்சரின் உத்தர வின்பேரில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கணே சன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகி யோர் சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொண்ட னர்.

சிபிசிஐடி விசாரணை

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு,“ பள்ளி மாணவி மரணம் குறித்த வழக்கை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார். வன்முறை சம்பவம் தொடர்பான விசா ரணை தீவிரமாக நடந்து வருகிறது. மாணவி யின் இறப்பில் உள்ள சந்தேகங்களை தீர்ப்ப தில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

எச்சரிக்கை

கனியாமூர் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவி மரணம் சம்பந்தமாக ஒரு  வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. இது சம்பந்தமான விசாரணையில் இந்த வீடியோ சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலையம் சிங்காரபுரம் அரசுப் பள்ளி யில் உள்ள மடிகணினியை திருட முயற்சி  செய்த சம்பவமாகும். இதனை வேறுவிதமாக  திசைதிருப்பி உள்ளனர். எனவே, சட்டம் -ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடு படுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

எடப்பாடியுடன் புகைப்படம்

கனியாமூர் தனியார் சக்தி பள்ளியின் தாளாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்த புகைப்படமும் தற்போது சமூக  வளைதளங்களில் வேகமாக பரவி வரு கிறது.