states

img

தொழிலாளியின் ரத்தம் உறிஞ்சும் கார்ப்பரேட் முதலாளிகள்

முதலாளித்துவம் எப்போதுமே தொழிலா ளர்களின் கூலி உயர்த்தப்பட்டதுதான், பொருட்களின் விலைவாசி உயர்ந்து பணவீக்கத்திற்கு காரணமாகிவிட்டது என்று அப்பட்டமாக பொய் கூறும். இப்படி கூறுவதற்கான நோக்கம், தொழிலாளர்களின் கூலியை உயர்த்துவதற்கான போராட்டங்களை நடத்தக் கூடாது என்பதே ஆகும்.  ஆனால் தற்போது, சர்வதேச நிதி நிறுவனம் ஒரு  விபரத்தை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் இரண்டு  ஆண்டுகளாக தொடர்ந்து பணவீக்கம் மிகக் கடுமையாக அதிகரித்து வருவதற்கு காரணம், பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களின் லாப குவிப்பு அளவில்லாமல் அதிகரித்தது தான் என்று சர்வதேச நிதி நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறுகிறது. லாப குவிப்பும், பிற நாடுகளிலிருந்து எரி பொருள் இறக்குமதி செய்யப்பட்டு, மிகக் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதும்தான் இரண்டு ஆண்டு கால பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணம் என்று அது குறிப்பிடுகிறது. 

2015 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை யில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு தொழில் களில் தொழிலாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்ட கூலி மற்றும் இதர  அனைத்து தொகை கள்; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்திய வரிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த தொகையை விட அந்த பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் அள்ளி சென்ற லாபத்தின் விகிதமே மிக அதிகம் என்று அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.  இதன் பொருள் என்னவென்றால், ஐரோப்பாவின் அனைத்து உழைக்கும் வர்க்க மக்களின் துயரங்களின்  மீது ஏறி நின்று பெரும் முதலாளிகள் லாபம் சம்பா தித்திருக்கிறார்கள்; அவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தத்தை ஈவிரக்கமின்றி உறிஞ்சியிருக்கிறார்கள்; மேலும், ரத்தத்தை உறிஞ்சுவதற்காக - மேலும் லாபத்தை  அதிகபட்ச அளவிற்கு குவிப்பதற்காக வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்; இதன் தொடர் விளைவு தான் பெருவாரியாக உழைப்பாளி மக்கள் நுகரும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி தொடர்ந்து  இரண்டு ஆண்டுக்கும் மேலாக சுழல் ஏணியில் ஏறிக் கொண்டிருக்கும் நிகழ்வு.

;