states

ப்ரோபோஃபோல் மயக்க மருந்திற்கு தடை

சோலன், (இமாச்சலபிரதேசம்) அக். 7 அறுவைச் சிகிச்சைக்கு முன் நோயாளி களுக்கு அளிக்கப்படும் ப்ரோபோஃ போல் என்ற மயக்க மருந்தை பயன்படுத்த வேண்டாம் என மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பு அறிவித்துள்ளது. இதன் தயாரிப்பை உடனடியாக நிறுத்து மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புரோபோஃபோல் ஊசி தர சோதனை யில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சண்டிக ரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவ மனையில், அறுவைச் சிகிச்சைக்கு முன் நோயாளிகளுக்கு  ப்ரோபோஃபோல் என்ற மயக்க மருந்து அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐந்து இறப்புகள் பதிவாகி யுள்ளன. இதையடுத்து இந்த ஊசி மருத்தைத் தயாரித்த நிக்ஸி லேபரட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் மத்திய  மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டது. தற்போது மருந்து தயாரிப்பை நிறுத்துமாறு உத்தர விடப்பட்டுள்ளது.   மருந்துகள் மற்றும்  அழகுசாதனப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் சட்டம், 1940 இன்  பிரிவு 18 (C) இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.