சிஐடியு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக். 31 - மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் - நடத்துநர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போக்குவரத்து கழகங்களில் சுமார் 20ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலி யுறுத்தி வருகிறது. இதற்கு மாறாக, ஒப்பந்த முறையில் பணியிடங்களை நிரப்ப நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு தன்னிச்சையாகவும், அனைத்து சங்க கூட்டமைப்பும் பல கட்ட போராட்டங்களை நடத்தின. சிஐடியு வேலை நிறுத்த அறிவிப்பு செய்தது. இதன்பேரில் தொழிலா ளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பணி நிலைமைகளில் (ஸ்டேட்டஸ்கோ) மாற்றம் செய்யக் கூடாது என்று தொழிலாளர் நல ஆணையர் பலமுறை அறிவுறுத்தி னார். அதனையும் மீறி, பல்வேறு கழ கங்களில் ஒப்பந்த முறையில் ஆட்களை நியமித்து வந்தனர். இந்த நிலையில், மாநகர போக்கு வரத்து கழகத்திலும் 117 ஓட்டுநர் பணி யிடங்கள், 117 நடத்துநர் பணியிடங் களை நிரப்ப ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப் புள்ளி செவ்வாயன்று (அக்.31) திறக்கப்படுவதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பணிமனைகளிலும் அதி காலை நேர ஆர்ப்பாட்டத்தை சிஐடியு நடத்தியது. அத்துடன் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ஒப்பந்தப் புள்ளியை திறக்க தடை விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் புதனன்று (நவ.2) விசாரணைக்கு வர உள்ளது.