states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

 1. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்த லில் போட்டியிட தொண்டர்கள் கேட்டுக் கொண்டால் நான் அதை  ஒருபோதும் நிராகரிக்க முடியாது. கட்சி தொண் டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பத விக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயார் என  காங்கிரஸ் மூத்த தலை வரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் கூறியுள்ளார்.
 2. எங்களுக்கு அரசிய லமைப்பு மற்றும் ஜனநாய கம் வேண்டுமே தவிர ஆர்எஸ்எஸ்-பாஜகவின் நிகழ்ச்சி நிரல் அல்ல.  பாஜகவை வீழ்த்தினால் அனைத்து பிரச்சனை களும் முடிவுக்கு வரும்  என அக்.,10-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கு மாறு ஆர்ஜேடி தலைவ ரும், பீகார் துணை முதல் வருமான தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 3. ஆயுத பூஜை விடு முறையை முன்னிட்டு 30.09.2022, 01.10.2022 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேரு ந்துகளின் மார்க்கங்கள் 3 பகுதிகளாக பிரிக்கப் பட்டு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. தாம்பரம் மெப்ஸ் (திண்டிவனம் மார்க்கம்), பூவிருந்த வல்லி பைபாஸ் (வேலூர், ஆரணி, காஞ்சி புரம், ஓசூர், திருப்பதி), தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி பைபாஸ்   பகுதியில் இயங்கவுள்ள மார்க்கங்களை தவிர மற்ற  அனைத்து மார்க்கங்க ளும் கோயம்பேட்டில் இயங்கும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறி வித்துள்ளது.
 4. இந்திய அளவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் 7.6 சதவீத மாக உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் 5  சதவீதத்திற்கும் குறை வாகவே உள்ளது என தமிழ்நாடு மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
 5. வக்பு வாரிய நிதியை முறைகேடு தொடர்பாக தில்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானின் காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டி த்து தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள் ளது.
 6. ஆந்திர சட்டசபை கூட்ட தொடரின் கடைசி நாளில் 13 தெலுங்கு தேச எம் எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். “என்டி ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின்” பெயரை, “ஒய்எஸ்ஆர் சுகாதார அறிவியல் பல் கலைக்கழகம்” என மசோதா மூலம் பெயர்  மாற்றம் செய்ததை யடுத்து, 13 எம்எல்ஏ-க்கள் நகல்களையும் எரித்தனர்.
 7. ஹரியானா மாநிலம் குருகிராமில் மேம்பாலம் அமைக்கும் பணியால் நாட்டின் முக்கிய தேசிய விரைவுச்சாலையான தில்லி-ஜெய்பூர் சாலையில் 7 முதல் 8 கிமீ வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
 8. 2020-ஆம் ஆண்டு கொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடு பட்டதாக அமைச்சர் செந் தில் பாலாஜி மீதான வழக் கை ரத்துசெய்தது சென் னை உயர்நீதிமன்றம்.
 9. வெனிசுலா என்பது ஒரு நம்பத்தகுந்த கூட்டாளி என்று ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். 24 நாடுகளின் தூதுவர்களிடமிருந்து அவர்களைப் பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “அனைத்துத் துறைகளிலும் இரு தரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து எடுத்துச் செல்கிறோம். சர்வதேச விவகாரங்களில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை இரு நாடுகளும் எடுத்து வருகின்றன” என்றார்.
 10. உக்ரைனுக்கு ராணுவ ரீதியான உதவிகளை அதிகப்படுத்தப் போவதாக பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ் அறிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டில் செலவழித்துள்ளதை விட, 2023-ஆம் ஆண்டில் அதிகமாகச் செலவிடுவோம் என்று உறுதி அளித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 11. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வட்டி உயர்வை ஐரோப்பிய நாடான ஸ்வீடன் அறிவித்திருக்கிறது. இந்தத் தகவலை அறிவித்த ரிக்ஸ்பேங்க் ஆளுநர் ஸ்டீபன் இங்க்வெஸ், வரும் ஆறு மாதங்களில் மேலும் வட்டி உயர்வு இருக்கும் என்றும் கூறியுள்ளார். நடப்பாண்டில் ஏற்கனவே ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வட்டி உயர்வை ஸ்வீடன் மத்திய வங்கி மேற்கொண்டது. பணவீக்கம் பெரும் அளவில் அதிகரித்துள்ளதால், குடும்பங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவர்களைப் பாதுகாக்க கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டியுள்ளது என்று ஸ்டீபன் இங்க்வெஸ் தெரிவித்திருக்கிறார்.
;