states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உலகில் காலநிலை மாற்  றம் பல்வேறு இடர்பாடு களை ஏற்படுத்தி வரும் நிலையில், தென் அமெ ரிக்க நாடான அர்ஜெண்டி னாவில் கடந்த ஞாயிற்  றுக்கிழமை 38.1 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெயில் கொளுத்தியது. திடீரென வியாழனன்று  7.8 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு வெயில் குறைந்து உறைபனி நிலை  ஏற்பட்டது. வெறும் 5  நாட்களில் இந்த மாற்றம்  ஏற்பட்டதால் அர்ஜெண் டினா மக்கள் உடலளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாஜக ஆளும் அசாம் மாநி லத்தில் குழந்தை திரு மணங்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெய ரில் கடந்த 2 வாரங்களில் 93 பெண்கள் உள்பட 3,047 பேர் கைது செய் யப்பட்டுள்ள தாகவும், இந்த நடவடிக்கை 2026 -ஆம் ஆண்டு வரை தொட ரும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

ஏர் இந்தியாவை தொட ர்ந்து இண்டிகோ விமான நிறுவனம் புதிதாக 500  விமானங்களை வாங்கு வதற்காக ஏர்பஸ் நிறு வனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

“அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண் டும் என்று நான் கூறிய அறிவுரையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண் டும். ஒன்றிணைந்து செயல்பட்டால் 2024 சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜகவை 100 சீட் டுக்குள் முடக்கிவிடமுடி யும்” என பீகார் முதல்வர்  நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

நீர் வழித்தடத்தில் கசிவு  காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நக ரான புனேவில் பிப்ரவரி  20-ஆம் தேதி தண்ணீர்  விநியோகம் பாதிக்கப் படும் எனத் தகவல் வெளி யாகியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம்  மேடக் பகுதி காவல்துறை யால் சித்ரவதை செய் யப்பட்டதாக கூறப்பட்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 35 வயது மிக்க தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம் ஆத்மி - பாஜக மோதல் காரணமாக தில்லி மாநகராட்சி மேயர்  தேர்தல் 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலை யில், மேயர் தேர்தலை பிப்ரவரி 22-ஆம் தேதி நடத்தும்படி தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் தலைமையிலான  மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு தில்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.56 கோடி மோசடி  செய்த வழக்கில் ஐஎப்எஸ் நிறுவன நிர்வாக இயக்கு நர் உள்ளிட்ட 10 பேருக்கு  பிடிவாரண்ட் பிறப்பித் தது சென்னை சிறப்பு நீதி மன்றம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம், 5 பேர்  கொண்ட ராணுவ போலீ சார் நேரில் விசாரணை நடத்தினர்.

உலகச் செய்திகள்

இலங்கையில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டபோது அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்த அமைப்பின் மாதர் பிரிவின் தலைவரான ஹிருனிகா பிரேமசந்திரா மற்றும் ஒன்பது பேருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறையை நடத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி யின் மாளிகை அருகில் வன்முறை நடத்தபோது இவர்கள் அங்கி ருந்ததால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

துருக்கியில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 84 ஆயிரம் கட்டிடங்களை அவசரமாக இடித்துத் தள்ளியே ஆக வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடங்கள் மிகவும் மோசமாகக் கட்டப்பட்டுள்ளன என்றும், இவற்றைக் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது குற்றப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 245 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான பகுதிகளை ஆக்கிரமித்துப் புதிதாக மேலும் சில குடியிருப்புகளை உருவாக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு நான்கு தென் அமெரிக்க நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அர்ஜெண்டினா, பிரேசில், சிலி மற்றும் மெக்சிகோ ஆகிய நான்கு நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “தன்னிச்சையாக எடுக்கப்படும் இந்த நடவ டிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கும் புறம்பாக இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டியுள்ளன.