சென்னை, செப். 15- மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவர் சாமிவேலு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசியாவில் இருக்கும் முக்கிய தமிழ் அரசியல் தலைவர் சாமிவேலு. மலேசியாவின் இபோ நகரில் 1936ஆம் ஆண்டு பிறந்து, 1959ஆம் ஆண்டு மலேசிய அரசியலில் கால்பதித்தார். 1974ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை சுங்கை சிப்புட் எம்.பி.யாக வும், 1979 முதல் 1989 வரை பணித் துறை அமைச்சராகவும் பணியாற்றி னார். 1989 முதல் 1995 வரை எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சராக இருந்தார். 1979ஆம் ஆண்டு முதல் 31 ஆண்டுகள் கேபினட் அமைச்சராக சாமிவேலு இருந்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்த சாமிவேலு மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 29 ஆண்டுகள் இருந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை மலேசிய இந்திய காங்கிரசின் எஸ்.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார். சாமிவேலுவின் மறைவுக்கு மலேசி யாவின் பல்வேறு அரசியல் தலைவர் கள் மற்றும் இந்திய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சாமிவேலு மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான எஸ்.சாமிவேலு மறைவு வேதனையளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.