states

எஸ்.பி.வேலுமணி வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும்

சென்னை, செப்.7- ஒப்பந்த முறைகேடு தொடர் பான வழக்குகளை ரத்து செய்யக்  கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசா ரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிக ளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் நடந்த  முறைகேடு தொடர்பாக முன்னாள்  அமைச்சர் வேலுமணி உள்ளிட் டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்  துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வேலுமணி தரப்பில் மூத்த  வழக்கறிஞர் ராஜூ ஆஜரா கியிருந்தார்.

ஒன்றிய அரசின் வரு மான வரித்துறை வழக்கறிஞர் எப்படி இந்த வழக்கில் ஆஜராக லாம் என்று தமிழக அரசுத் தரப்பில்  ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், இந்த மனுவை தனிநீதிபதி தான்  விசாரிக்க வேண்டும், இரு நீதிபதி கள் அமர்வு விசாரிக்க முடியாது  என்றும் ஆட்சேபம் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் புதனன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் ஆட்சேபம் குறித்து, நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ஒப்பந் தம் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளை தலைமை  நீதிபதி அமர்வே விசாரிக்கும். வேலுமணி தாக்கல் செய்த வழக்குகள் மீதான இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர் பான விசாரணையை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் இந்த வழக்கில்  ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

;