அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, செப்.7- உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவரக் கோரிய வழக்கில், சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பொதுப்பணித் துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு வினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “07.05.2014 - இல் நீதிமன்றம் பெரியாறு அணையில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என வும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்தியபின் 152 அடி வரை நீர்தேக்கிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் 2014 ஆம் ஆண்டிலிருந்து 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர், அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரளா பகுதிக்கு வீணாக திறக்கப்பட்டு வருகிறது. தமி ழகப் பகுதிக்கு தேக்கடி ஷட்டரி லிருந்து 1958 ஆம் ஆண்டிலிருந்து சுரங்கப்பாதை வழியாக அதிக பட்சமாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இந்த தண்ணீர் லோயர் கேம்ப் மின்உற்பத்தி க்கு 4 ராட்சத குழாய் வழியாகவும், இறைச்சல் பாலம் வழியாகவும் வெளி யேறும். இதைவிட கூடுதல் நீர் திறக்க வாய்ப்பில்லை.
எனவே, தமிழகப் பகுதிக்கு மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து இதை விட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் வீணாக கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற வேண்டிய அவசியமில்லை. எனவே, 07.05.2014 உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக பகு திக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க இரண்டாவது சுரங்கப்பாதை அமைக்க லாம் என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் லோயர் கேம்ப்பில் இருந்து இராமநாதபுரம் வரை 259 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது. எனவே, முல்லைப் பெரியாறு அணை யில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி கள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுத லாக சுரங்கப்பாதை அமைத்து தமிழ கத்திற்கு தண்ணீர் கொண்டு வருவத ற்காக ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அவர்களின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினர். சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தில் புலிகள் சரணாலயம் அமை ந்துள்ளதால் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலர் முல்லைப் பெரியாறு அணை யில் இருந்து கூடுதல் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.