states

img

திருமூர்த்தி மலை - குருமலை வழித்தடம் அமைத்திடுக! மலைவாழ் மக்கள் உறுதிமிக்க போராட்டம்

உடுமலைப்பேட்டை, ஜூலை 13- வன உரிமைச் சட்டத்தின்படி, மலைவாழ் மக்களுக்கு திருமூர்த்தி மலையில் இருந்து குருமலை பகுதிக்கு வழித்தடம் அமைக்க வேண்டும் என்ற உள்ளாட்சி மற்றும் வனக்குழு தீர்மா னங்களுக்கு வனத்துறை ஒப்புதல் தர  வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு  மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில், புதனன்று உடுமலை வனத்துறை அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர். இந்த காத்திருப்பு போராட்டம் வியாழ னன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பேசுகையில்,  வனஉரிமைச் சட்டம் – 2006 என்பது, மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, இடது சாரிகளின் தொடர் வலியுறுத்தலால் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம், மலை வாழ் மக்களுக்கு நில உரிமையும், வன  உரிமையும் சட்டப்படி வழங்குகிறது.  15 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப் பட்ட இச்சட்டம், தமிழ்நாட்டில் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை. தமிழ்நாட்டில் சொற்ப அள விலான பழங்குடியின மக்களுக்கு மட்டுமே விவசாய நிலம் மற்றும் வீடு  கட்டுவதற்கான உரிமை வழங்கப் பட்டுள்ளது. சாலை, வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சல் போன்ற சமு தாய உரிமைகள் வழங்கப்படாமலே உள்ளது. இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதில் மாநில அரசு மெத்தனப்போக்கு காணப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் முட்டுக் கட்டையாக உள்ளனர். இப்பிரச்சனை குறித்து அளிக்கப்பட்ட ஆயிரக்கணக் கான மனுக்கள் பல்வேறு அரசு அலு வலகங்களில் தீர்வு காணப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. திரு மூர்த்திமலை பகுதி மக்களின் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் முக்கிய கோரிக்கை, மலைப்பகுதியில் சாலை அமைக்க மாவட்ட வன அலுவலர் தடை யின்மை சான்று வழங்க  வேண்டும் என்பதாகும்.

சாலை அமைப்பதற்கு நில அளவீடு செய்யப்பட்டு, தளி பேரூராட்சி மற்றும்  கிராமசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மாவட்ட வன அதிகாரிகள் கை யெழுத்திடாததால், இப்பணியானது கடந்த 7 மாதங்களாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. மாவட்ட வன அலுவல ரின் இந்த பிடிவாதம் சட்டவிரோத செய லாகும். மக்களின் கோரிக்கையை காலங்கடத்தி, அதனை முறியடிக்க நினைப்பதை வன அதிகாரிகள் கைவிட வேண்டும். திருமூர்த்திமலை பகுதியில்  சாலை அமைக்காததால், அப்பகு தியைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயி ரிழக்கின்றனர். ஒரு பகுதி மக்கள் சமு தாயத்தில் முன்னேற வேண்டும் என்றால், சாலை போக்குவரத்து என்பது அவசியமானதாகும். ஆனால், நாடு விடு தலை பெற்று 75 ஆண்டுகளை கடந்த பின்னரும், சாலை வசதி என்ற அடிப் கடை தேவையானது, திருமூர்த்தி மலை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. சாலை அமைப்பதற்கான தீர் மானத்தை நிறைவேற்ற, வன அதிகாரி கள் தடையின்மை சான்றில் கையெழுத்திடுவதே இந்த காத்திருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழியாகும். இல்லையெனில், எத்தனை நாட்களா னாலும் போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என்றார். இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மலைவாழ் மக்கள் சங்கம் மாநில துணை தலைவர் கோ.செல்வம், விதொச மாவட்ட செயலாளர் பஞ்ச லிங்கம், வி.ச.மாவட்ட செயலாளர் குமார், சிபிஎம் உடுமலை நகர செய லாளர் தண்டபாணி உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றுள்ளனர். 

மலைவாழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கான இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், போராட்டக் களத்திற்கு நேரில் வந்த திமுக உடு மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகா லட்சுமி முருகன், தளி பேரூராட்சி தலை வர் உதயக்குமார், திமுக உடுமலை மத்திய‌ ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டம் குறித்து அமைச்சரிடம் தெரிவிப்பதாகவும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்தியும் பேசினர். இதேபோன்று, பழங்குடியின மக்க ளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, உடுமலை யில் சிஐடியு ஆட்டோ சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான ஆட்டோ தொழிலா ளர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

;