states

img

நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி போராடியவர்களின் வீடுகள் புல்டோசரால் இடிப்பு

லக்னோ, ஜூன் 12- நபிகள் நாயகம் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கிய நிலை யில், அவர்களை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதனொரு பகுதியாக உத்த ரப்பிரதேச மாநிலம் லக்னோ, பிரக்யாராஜ், மொரதாபாத், சஹாரன்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. இதில்  கடந்த வெள்ளிக்கிழமை மொரதா பாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்க ளில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறை வன்முறையை ஏவி யது. இதையடுத்து உத்தரப்பிரதேச காவல்துறையினர் இதுவரை சுமார் 300 பேரை கைது செய்துள்ளனர்.  அதோடு நின்றுவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் களின் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளியுள்ளனர். முஸ்லிம்களின் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய பிரக்யா ராஜின் கரேலி பகுதியில் அமைந் துள்ள ஜேகே ஆஷியானா காலனி யில் வசிக்கும் ஜாவேத் முஹமது என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம்  இடித்துத் தள்ளப்பட்டது.

வீட்டை இடிப்பது தொடர்பாக  நகராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்  கிழமை இரவு ஜாவித் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை புல்டோசர் மூலம் அவரது வீடு இடிக்கப்பட்டது. முஹமதுவின் மகளும் சமூக  ஆர்வலருமான அஃப்ரீன் பாத்திமா, தமது குடும்பத்தினரை வாரண்ட் இல்லாமல் காவல்துறை தடுத்து வைத்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மிருகங்களாக மாறிய காவல்துறை இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில் உள்ள  காவல்நிலையத்தில் கைது செய் யப்படவர்களை காவல்துறையினர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ  படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள் ளது. இந்த வீடியோ இரண்டு நாட்க ளுக்கு முன்பு சஹாரன்பூரில் உள்ள  காவல் நிலையத்தில் எடுக்கப்பட் டது. அதில், தடிகளுடன் ஆயுதம்  ஏந்திய இரண்டு காவல்துறையினரி டமிருந்து இடைவிடாமல் விழும் அடியை தாங்க முடியாமல், ஒன்பது பேர் கெஞ்சுகிறார்கள். ஆனால் காவல்துறையினர் அவர்களை அடித்து சித்திரவதை செய்கிறார்கள். இந்தக் காட்சியை தனது டுவிட்  டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளி யிட்டு பகிரங்கப்படுத்தியுள்ளார் உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஷலப் மணி.