கோவை, செப்.23- கோவை பாஜக அலுவலகம், நிர்வாகி களுக்கு சொந்தமான கடை மற்றும் வீடு களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கும் சம்பவம் கோவையில் பதற்றத்தை அதி கரித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மதரீதியான மோதலை உருவாக்கும் விதத்தில் மத வெறி அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சமீ பத்தில் இந்து முன்னணி கூட்டத்தில் வன்மு றையை தூண்டும் விதத்தில் பேசிய பாஜக கோவை மாவட்ட செயலாளர் பாலாஜி உத்தமராமசாமி காவல்துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக் கிறார். அதனைத்தொடர்ந்து வியாழனன்று கோவை கரும்புக்கடை பகுதியில், பாப்பு லர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை சோத னை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ அமைப்பினர் பல்வேறு இடங் களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வியாழனன்று இரவு கோவையில் உள்ள பாஜக அலுவல கத்தில் இருவர் பைக்கில் சென்றவாறு, பெட்ரோல் குண்டை வீசிச்சென்றனர். நல்வாய்ப்பாக அந்த குண்டு வெடிக்க வில்லை. அதேபோல் கோவை ஒப்பணக் கார வீதியில் பாஜக நிர்வாகிக்கு சொந்த மான மாருதி செலக்சன் என்கிற துணிக்கடை மீதும் மண்ணெண்ணெய் திரியுடன் பாட்டி லை இருவர் வீசிச்சென்றனர். பொள்ளாச்சி யில் வெள்ளியன்று அதிகாலை பாஜக நிர்வாகிகளின் கார், ஆட்டோ வாகனங் களின் கண்ணாடியை உடைத்தும், டீசல் ஊற்றியும் எரிக்க முயற்சி நடைபெற்றி ருக்கிறது. இதேபோன்று குனியமுத்தூரில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகுவின் கார் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். மேலும் மேட்டுப்பாளையத்தில் பாஜகவை சேர்ந்த மதன் குமார், சச்சின் உள்ளிட்டோருக்கு சொந்தமான பிளைவுட் கடைகளில் ஜன்னல் களை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றிருக் கின்றனர். இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதையொட்டி கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காவல்துறையின் பாது காப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. மத வெறி அமைப்புகள் எப்படியாவது வன்மு றையை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் இந்த சூழலில் பொது மக்கள் ஆத்திரமூட்டலுக்கு இரையாகா மல் வன்முறையை தூண்டுபவர்களை தனி மைப்படுத்திட வேண்டும் என சமூக ஆர் வலர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.