states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூ றாக சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரத் தில் பாஜக தலைவர் அண் ணாமலையின் உதவி யாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கைது செய்ய ப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் பலர் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரி வித்துள்ளது. மேலும் இது தொடர்பாக முன்ஜாமின் கோரி ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் விசாரணை யும் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
  2. தமிழ்நாட்டில் அக்.14 முதல் அக்.20 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் எனவும், தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம்  அக்டோபர் முதல் வா ரத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  3. 12-ஆம் வகுப்பை நிறைவு செய்த 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர் கல்வி தொடராத மாண வர்களின் விவரங்களை  அனுப்ப  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. விபரங்கள்  கிடைத்த பின்பு ஒவ் வொரு மாணவரையும் தொடர்புகொண்டு உயர்கல்விக்கான வழி காட்டுதல்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
  4. கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த துரை மணிகண்டன், ஜெயபாரத், யுவராஜ் மற்றும் ஒகையூர் பகு தியை சேர்ந்த சாமிதுரை, அண்ணாமலை ஆகிய 5 பேரை வீடியோ ஆதா ரங்களை கொண்டு சிறப்பு புலனாய்வு பிரிவு  போலீசார் கைது செய்த னர்.
  5. போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் 41 நபர்கள் குற்றம் இழை த்தது கண்டறியப்ப ட்டுள்ளதாக உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் க்யூ பிரிவு போலீசார்  அறிக்கை அளித்துள்ள னர். 41 பேரில் 14 பேர் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள், 6 பேர் மாநில அரசு ஊழியர்கள் என அறிக்கையில் தகவல்.
  6. ஹாக்கி இந்தியா (எச்ஐ) தலைவராக இந்திய ஹாக்கி அணியின் முன் னாள் கேப்டன் திலிப்  டிர்கி தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  7. கொலம்பியா மற்றும் வெனிசுலா ஆகியவற்றிற்கிடையிலான எல்லை திறக்கப்படுவதால் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 26-ஆம் தேதியன்று வர்த்தக நடவடிக்கைகள், எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் சரக்குகள் கையாளுதல் ஆகியவை நடைபெறவிருக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், கொலம்பியா மற்றும் வெனிசுலா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் உதவும் என்று வெனிசுலாவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஏஞ்சல் ரோட்ரிகஸ் கூறியுள்ளார்.
  8. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாதிமாலாவில் விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். பெரும் ஊழல் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று அந்நாட்டின் ஜனாதிபதி அலெஜாண்ட்ரோ கிளம்மட்டேய் மற்றும் அரசுத் தலைமை வழக்கறிஞர் கான்சுலோ போரஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்று வருகின்றனர்.
  9. வெளிநாட்டுப் பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஜப்பான் முடிவு செய்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் எல்லைகளைத் திறக்கவும் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்தத் தகவலை ஜப்பான் அமைச்சர் டாரோ கோனோ தெரிவித்துள்ளார். பெருந்தொற்றிலிருந்து தங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
;