சர்வதேச அளவில் முதலிடம் பெங்களூரு விமான நிலையம்
சர்வதேச அளவில் விமான சேவை களை பகுப்பாய்வு செய்யும் நிறு வனமான சிரியம் சரியான நேரத் தில் விமான இயக்கம் (நேரம் தவறாமை) தொடர்பாக மாதந்தோறும் ஆய்வறிக்கை யை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற் கான ஆய்வறிக்கையை சிரியம் நிறுவனம் செவ்வாயன்று வெளியிட்டது. இந்த பட்டி யலில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 88.51% நேரம் தவறாமை விகிதத் தில் விமானங்களை இயக்கி முதலிடத் தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி இரண்டாம் இடத்திலும், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் மூன்றாவது இடத்தி லும், அமெரிக்காவின் மினியாபொலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம் 4-ஆவது இடத்திலும், கொலம்பியாவின் எல் டொராடோ சர்வதேச விமான நிலை யம் 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலை யம் இப்பொழுது மட்டுமல்ல ஜூலை (87.51%), ஆகஸ்ட் (89.66%) ஆகிய மாதங் களிலும் முதலிடம் பிடித்தது என்பது குறிப் பிடத்தக்கது.
மஹுவாவுக்கு எதிரான புகார் மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு அனுப்பிவைப்பு
2019 முதல் 2023 வரை திரிணா முல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளு மன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள் ளார். அவற்றில் 50 கேள்விகள் ஹிர நன்தனி மற்றும் அவரது வணிக நிறு வனத்தை பாதுகாக்கும் உள்நோக் கத்துடன் கேட்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசா ரிக்க நாடாளுமன்ற விசாரணை குழுவினை அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஞாயிறன்று கடிதம் எழுதியிருந்தார் பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே. இந்நிலையில், இந்தப் புகாரை சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது மக்க ளவை நெறிமுறைக் குழுவின் தலைவராக பாஜகவின் வினோத் குமார் சோன்கர் இருக்கிறார் என் பது குறிப்பிடத்தக்கது.
கோதுமை விலை கடும் உயர்வு
அரிசியைப் போன்று கோதுமையும் நாட்டின் முதன்மை உணவாக உள்ள நிலையில், விழாக்காலத்தையொட்டிய அதிக தேவை, குறைந்தபட்ச விநியோகம், இறக்குமதி வரி உள்ளிட்டவைகளால் கோதுமை விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள் ளது. தில்லியில் கோதுமை விலை 1.6% அதிகரித்து ஒரு மெட்ரிக் டன் ரூ.27,390ஆக விற்பனையாகிறது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை ஒப்பி டும்போது 22% அதிகமாகும். நடப்பாண்டில், இந்திய விவசாயிகளிட மிருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டிருந்த நிலையில், 26.2 மில்லியன் டன் கோதுமையே பெற முடிந் தது. இதனால் இருப்பும் வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது.
ராகுல் காந்தி மீதான வழக்கு ஒத்திவைப்பு
கர்நாடக மாநிலம் பெங்க ளூரைச் சேர்ந்த பெண் பத்தி ரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 2017-இல் அவரது வீட்டருகே இந்துத்துவா குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கவுரி லங்கேஷ் மரண விவகாரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வ யம் சேவக் சங்கத்தை (ஆர்எஸ்எஸ்) தொடர்புப்படுத்தியதாகக் கூறிய தாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது ஆர்எஸ்எஸ் அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தார். மனு வை விசாரித்த நீதிபதி எஸ்.வி. கோட்வால் வழக்கை டிசம்பர் 5-க்கு ஒத்திவைத்தார்.
மீண்டும் சதமடித்த சின்ன வெங்காய விலை
சென்னை, அக். 17- சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இஞ்சி, வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக விலை சற்று அதிகரித்துள்ளது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 1 கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.
புதுச்சேரியில் திடீரென செந்நிறமாக மாறிய கடல்
புதுச்சேரி,அக்.17- புதுச்சேரி கடற்கரை சாலையில் செவ்வாயன்று காலை 10 மணி முதல் கடல் நீரானது படிப்படியாக நிறம் மாறத் தொடங்கியது. தொடர்ந்து 200 மீட்டர் தூரத்திற்கு தற்போது செந்நிறத்தில் மாறியது. இதனால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணி கள் கடலை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.மேலும் கடல் நீர் செம்மண் நீரானது குறித்து தகலவறிந்த ஏராளமா னோர் கடற்கரையில் குவிந்தனர். தொடர்ந்து அங்கு வந்த சுற்றுச்சுழல் அதிகாரிகள், கடல் நீரை பரிசோதனை செய்வதற்கு பாட்டிலில் எடுத்து சென்றுள்ளனர். ஆற்றில் உருவாகும் ஒரு வகையான பூஞ்சைக் காளான் ஆற்று நீரோடு கடலில் கலக்கும் போது ரசாயன மாற்றம் ஏற்பட்டதே நீரின் நிற மாற்றத்திற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் அனுமதித்தால் லியோவுக்கு 6 காட்சி
சென்னை,அக்.17- நீதிமன்றம் அனுமதி அளித்தால் லியோ திரைப்படத்தின் 6 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதிதெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத் தில் செவ்வாயன்று செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், நாங்கள் சினிமா வில் எந்த வித தடையும் போட்டு திரை உலகத்துடன் எதிர்ப்பை பெற்றுக்கொள் பவர்கள் நாங்கள் அல்ல. அதிமுக ஆட்சி யில் திரைத்துறையை என்ன பாடுபடுத்தி னார்கள் என தெரியும். திரைத்துறையை முடக்க திமுக அரசு எதுவும் செய்ய வில்லை. அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப் படுத்துகிறோம். சின்ன தயா ரிப்பாளர்களின் படங்களும் வெளியாக உதவுகிறோம் என்றார் அமைச்சர்.
தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு
சென்னை, அக்.17- மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க வில்லை, நாம் தமிழர் கட்சி என்றுமே தேர்தல்களில் தனித்துத் தான் போட்டியிடும் என நாமக்கல்லில் செவ்வாயன்று செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த சீமான் தெரி வித்துள்ளார்.