புதுதில்லி, ஆக.6- நாடு முழுவதும் உள்ள மாவட்ட, கீழமை நீதிமன்றங்களில் 4.24 கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. பல் வேறு நீதிமன்றங்களில் உள்ள இந்த வழக்குகளை தீர்ப்பதற்கு எந்தக் காலக் கெடுவும் நிர்ணயிக்கவில்லை என ஒன் றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரி வித்துள்ளார். 10,000 வழக்குகள் பத்தாண்டு களுக்கும் மேலாக நிலுவையில் உள் ளன என்றும் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இதுதொடர் பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன் றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ வியாழக்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரையிலான விவரங்க ளின்படி, 56,000 சிவில் வழக்குகள், 15,000 குற்ற வழக்குகள் உள்பட மொத் தம் 71,411 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10,491 வழக்கு கள் பத்தாண்டுகளுக்கும்
மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன. 18,134 வழக்குகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும், 42,000 வழக்குகள் ஐந் தாண்டுகளுக்கும் குறைவான கால அளவிலும் நிலுவையில் இருந்து வருகின்றன என்று தெரிவித்தார். 50 சதவீத அதிகரிப்பு மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், ‘நாட்டிலுள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் கடந்த 2016-ஆம் ஆண்டு வரை 40,28,591 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இது ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி 59,55, 907-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீத அளவுக்கு அதிகரித்துள் ளது. அதுபோல, மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டிலிருந்து 50 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்த நீதிமன்றங்க ளில் கடந்த 2016-இல் 2.82 கோடியாக இருந்த நிலுவை வழக்குகளின் எண் ணிக்கை, தற்போது 4.24 கோடியாக உயா்ந்துள்ளது’ என்று தெரிவித்தார். நீதிமன்றங்கள் பல்வேறு வகை யான வழக்குகளை தீர்த்து வைப்ப தற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.