பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “லெஜி யன் ஆப் ஹானர்” விருது இந்தியாவின் இஸ்ரோ பெண் விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பி காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிலச்சரிவு மற்றும் நிலத்தடி சரிவால் பாதிக்கப்பட்ட ஜோஷிமத் பகுதிக்கு ரூ.1658.17 கோடி மதிப்பீட்டில் மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டத் துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 6 ஆண்டுகளில் 250 பிறந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அதிர்ச்சி தகவல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் ஓட்டுநர் பணி முடிந்து சென்ற தால் இரண்டு விரைவு ரயில்கள் நடுவழியில் அடுத்த டுத்து நிறுத்தப்பட்டன. இதனால் 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கனமழை பெய்ய இருப்ப தால் இருமாநில மக்கள் கவனமாக இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் மோசடியைத் தடுக்கும் நோக்கில் சந்தே கத்திற்கிடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட 70 லட்சம் மொபைல் எண்களை அரசாங்கம் தற் காலிகமாக முடக்கி வைத்துள்ளதாக நிதிச்சேவை கள் செயலர் விவேக் ஜோஷி தகவல் தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நவம்பர் 1 முதல் விண்ணப் பித்து வருகின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப் பிக்க நவம்பர் 30 கடைசி நாள் என்ற நிலையில், டிச.4 வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு கள் முகமை அறிவித்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு ரூ.1.6 லட்சம் கோடி மதிப்பில் போர் விமானங்கள், ஹெலிகாப் டர்கள் வாங்க ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.65,000 கோடி யில் 97 தேஜஸ் போர் விமானங்கள், 165 பிரசந்த் இலகு ரக ஹெலிகாப்டர்கள், 84 சுகோய் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக இந்தியப் பெருங் கடல் பகுதியின் பாதுகாப்புக்காக ரூ.40,000 கோடி செலவில் விமானந்தாங்கி போா்க் கப்பலை கட்டும் (உள்நாட்டிலேயே தயாரிக்க) முன்மொழி வுக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.