states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு செயற்கை சுவாசம்’ 

கொல்கத்தா,ஜூலை 30- மேற்குவங்க முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சுத் திண றல் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவருக்கு வெண்டிலேட்டர் உதவி யுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக வும் அவரது உடல்நிலை,  தொடர்ந்து கவலைக்கிட மாக உள்ளதாகவும் மரு த்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘அமித்ஷாவின் எண்ணம் நிறைவேறாது’

சென்னை, ஜூலை 30- பாஜக மாநில தலைவர் அண்ணா மலை மேற்கொண்டுள்ள யாத்திரை பாத  யாத்திரை இல்லை, பாவ யாத்திரை தான். தேர்தலை முன்னிட்டு மணிப்பூரில் பிரிவினையை கட்டவிழ்த்துவிட்டு பெண்  கள் பாலியல் வன்கொடுமை செய்யப்  பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒன்றிய அமைச்சர்கள் வரும் தேர்தல் 80க்கும் 20க்கும் ஆன தேர்தல் என்று  கூறி சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை  உருவாக்கி வருகிறார்கள். திமுகவை விமர்சிக்க பாஜக-வினருக்கு எந்த தகுதி யும் இல்லை. இவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர் நலனுக்கு எதிராக  பேசுவதை வழக்கமாக கொண்டவர்கள். தமிழ்நாட்டில் அமித்ஷா வின் எண்ணம் நிறைவேறாது என பால்வளத்துறை அமைச்  சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

பாஜக அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும் திருச்சி சூர்யா சாடல்

சென்னை, ஜூலை 30- பாஜக தலைவர் அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும் என்று  திருச்சி சூர்யா சாடியுள்ளார். திமுக மூத்தத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா கடந்த  ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணா மலை முன்பு அக்கட்சியில் இணைந்தார். இவ ருக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கப் பட்டது. பாஜக பெண் நிர்வாகியான டெய்சி சரணை  திருச்சி சூர்யா ஆபாசமாக பேசிய ஆடியோ  வெளியானது. இதைத்தொடர்ந்து அவர்  6  மாதங்கள் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் திருச்சி சூர்யா  பாஜகவிலிருந்து விலகினார். ஆனாலும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்தார். இந்நிலையில் டிவிட்டரில் திருச்சி சூர்யா  வெளியிட்டுள்ள பதிவில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி  நான் விமர்சனம் செய்யாமல்தான் இருந்தேன்.  வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் உண்மை யாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம்  கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முத லில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு  நபர் அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய் என்று தெரிந்துவிட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம்  உடையும் என்று தெரிவித்துள்ளார்.   இந்த பதிவு பாஜக வட்டாரத்தில் கலக்  கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.

‘தோழி’மகளிர் முகவரி: முதல்வர் பெருமிதம்

சென்னை, ஜூலை 30- தமிழ்நாடு அரசின் ‘தோழி’விடுதிகள் திட்டம் முன்னேறும் மகளிருக்கான முகவரி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வேலை நிமித்தமாக நகரங்களை நோக்கி நகரும் மகளிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை, செங்கல்பட்டு, விழுப் புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் ‘தோழி’ விடுதிகள் செயல் பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் தனி யாரைக் காட்டிலும் குறைவான கட்ட ணத்தில் ஒரு நாள், மாத கணக்கில் தங்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. ஒருவர் முதல் ஆறு பேர் வரை அறை களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், மகளிருக்கு சொத்துரிமை, உள்ளாட் சியில் 33 விழுக்காடு ஒதுக்கீடு, உயர் கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலு சேர்க்கும் என குறிப்பிட்டு ள்ளார். மேலும், நடேசனார் ‘திராவிடர் இல்லம்’ போல், தோழி விடுதிகள் திட்டமும் வரலாற்றின் பக்கங்களில் நிலை கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

மோடியே போட்டியிட்டாலும் தோற்பார்: சேகர்பாபு

சென்னை, ஜூலை 30- வருகிற மக்களவைத் தேர்தலில், தமிழ் நாட்டில் எந்த தொகுதியில் மோடியே போட்டியிட்டாலும் தோற்பார் என்று  அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரி வித்தார். சென்னை தங்கசாலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணி ரூ.10 ஆயிரம், மற்றும் குழந்தைகளுக்கான பரிசு பெட்ட கம் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் செய்த பாவங்களுக்கு  பிராயச்சித்தம் தேடி பாதயாத்திரை செல்கிறது. ஒன்றிரண்டு விழுக்காடு வாக்குகள் வைத்திருக்கும் பாஜகவை திமுகவுடன் ஒப்பிடவேகூடாது. தமிழ்நாட்டில் மோடியே எதிர்த்து  நின்றாலும் திமுக அணியிடம் தோற்பது உறுதி. இதை சவாலாக சொல்கிறேன்.வரு கிற மக்களவைத் தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்றும் அவர் கூறினார்.

வெப்பம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை, ஜூலை 30 சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31 அன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச  வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத் தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

காவல்துறை ஏஎஸ்பி க்களுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 30- தமிழ்நாட்டில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் (ஏஎஸ்பி) நான்கு பேர் கண்காணிப்பாளர்களாக (எஸ் பி) பதவி  உயர்வு வழங்கி பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக  அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தர வில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு  காவல் பட்டாலியன் 1-ல், ஏஎஸ்பி எஸ்.ரவிச் சந்திரனுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர காவல்துறை தலை மையகத்தில் துணை ஆணையராக நியமிக் கப்பட்டுள்ளார். விழுப்புரம் காவல்துறை பயிற்சி பள்ளி யில் ஏஎஸ்பியாக உள்ள ஹெச்.ரமேஷ் பாபு வுக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி சென்னை மாநகர காவல்துறையின் உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவின் துணை ஆணை யராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட காவல்துறை தலை மையகத்தில் ஏஎஸ்பியாக உள்ள வி.மலைச் சாமிக்கு, எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி சென்னை அறிவுசார் சொத்துரிமை அம லாக்க துறையின் காவல் கண்காணிப் பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவு எஸ் பி யாக உள்ள ஏ.சி.செல்லப்பாண்டிக்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி ஆவடி யில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் பட்டாலி யன் 5-ன் கமாண்டண்ட்டாக நியமிக்கப்பட் டுள்ளார்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.