states

மூன்று கர்ப்பிணிகள் மீட்பு

திரிச்சூர், ஆக.6- கனமழை காரணமாக கேரள மாநிலம் வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நடுக்காட்டில் மழையில் சிக்கிக் கொண்டிருந்த மூன்று கர்ப்பிணிகளை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். காட்டில் வசித்து வரும் பழங்குடி மக்களில் மூன்று பெண்கள் கர்ப்பிணி களாக இருந்த நிலையில், கனமழை  பெய்ததால் காடு முழுக்க வெள்ளக் காடானது. அதில் சிக்கிக் கொண்ட மூன்று  கர்ப்பிணிகளையும் வனத்துறையின ரும் காவல்துறையினரும் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதற்கிடையே கர்ப்பிணிகளில் ஒருவர் வனப்பகுதிக்குள்ளேயே குழந்  தையைப் பெற்றெடுத்தார். அவர்  மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்ட தால், வனத்துறையினர் அவருக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்துவிட்டு, மற்ற இரண்டு கர்ப்பி ணிகளையும் பத்திரமாக மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். மற்ற இருவரில் ஒருவர் ஆறு மாதம், மற்றொருவர் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளனர்.  அவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தித் தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஒப்புக்கொள்ள வைத்தனர்.  பெரிங்கல்குத் அணைக்கட்டைத் தாண்டி, படகு வழியாக, மிகப் பெரிய சவாலான பாதையைக் கடந்து கர்ப்பிணிகள் மீட்கப்பட்டுள்ள னர். இரண்டு பேரும் சாலக்குடி  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தீவிர முயற்சி மேற்கொண்டு கர்ப்பி ணிகளை மீட்ட அதிகாரிகளை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பாராட்டியுள்ளார்.