states

img

போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் போராட்ட அழைப்பு

சென்னையில் வியாழனன்று நடைபெற்ற போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து தொழிற்சங்கக் கூட்டத்தில், போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யக் கூடாது; அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்து போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும்; காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்; போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்; புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட வேண்டும்; ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஒப்பந்த பலன்களை வழங்குவது, ஓய்வுபெற்றவுடன் பணப்பலன்களை வழங்குவது ஆகிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னை பல்லவன் இல்லம் முன்பு அக்டோபர் 30, 31, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெறும் என்றும், பெருந்திரள் அமர்வு போராட்டத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.