states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“அஜித் பவார் தலைமையிலான அணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்சிபி) இருந்து என்னை நீக்கும் அதிகாரம் இல்லை. என்சிபியின் 53 எம்எல்ஏக்களும் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் உள்ளனர்” என மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் என கூறியுள்ளார்.

அழிக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் 1.3 மில்லியன் டன் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற ஜப்பான் திட்டமிட்டுள்ளது. வெளியேற்றப்படும் கதிரியக்க நீர் ஒலிம்பிக் அளவிலான 500 நீச்சல் குளங்களை நிரப்பும் கொள்ளளவு கொண்டது.

“உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவுடனான உறவு பயனுள்ளதாக இருக்கும்” என ஐநாவுக்கான பிரிட்டன் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு உதவ பிரிட்டன் ஆயுதங்களை அனுப்பி வரும் நிலையில், பிரிட்டன் தூதரின் கருத்து ஐரோப்பிய கண்டத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

நில பத்திரப்பதிவு செய்த நபர்கள் அதனை, தனிநபர்  வருமான வரிக்கணக்கு தாக்கலில் தெரிவித்துள்ளார் களா என ஒப்பிட்டு பார்த்து சார்பதிவாளர் அலுவல கங்களில் ஒவ்வொரு ஆண்டும் சோதனை நடத்தப்படும் என தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை தொடர்பாக  வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தேர்வு முறை யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என  தமிழ்நாடு அளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ள நிலையில், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து  கொட்டி வருகிறது. மெயின் அருவியில் பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில்,  ஐந்தருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் 168 கடைகளின் உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த ராகுல் காந்தி மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கக் கூடாது என ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

கோவை சுகுணாபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர்  உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்ப்யூட்டர் சிப் தயாரிக்கப் பயன்படும் முக்கிய உலோகங்களான காலியம் மற்றும் ஜெர்மானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் சில பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

“எனது சித்தாந்தத்திற்கு “துரோகம்” செய்தவர்கள் தனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அஜித்  பவார் தலைமையிலான பிரிவின் புதிய அணி தனது கட்சி அலுவலகத்தில் சரத் பவார் புகைப்படம் வைத்தது தொடர்பாக சரத் பவார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

வரத்து குறைவால் நாட்டின் ஒரு சில பகுதிகளில் பச்சை  மிளகாய் மற்றும் இஞ்சி விலைகள் கிலோவுக்கு ரூ.400 தாண்டியுள்ளது. சென்னையில் பச்சை மிளகாய் கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், கொல்கத்தாவில் கிலோ ரூ.350யை தாண்டியுள்ளது. 

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் 7 முக்கிய ரயில்களில் 2-ஆம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி  பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய  மாற்றங்கள் இம்மாத இறுதி மற்றும்  ஆகஸ்ட்  தொடக்கத்தில் அமலுக்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது

வனவிலங்குகளை மின் விபத்திலிருந்து பாது காப்பதற்கு மின்வேலிகள் ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

உலகச் செய்திகள்

மத்திய அமெரிக்க நாடான குவாதிமாலாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையங்களுக்கு ஐந்து நாட்களுக்குள் அனைத்து புகார்கள் மீதான விசாரணைகளை நடத்தி முடிக்குமாறு அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஒன்பது அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கை குறித்து பல புகார்களை அளித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

1884ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் இல்லாத அளவிற்கு கடுமையான ஜூன் மாத வெப்பத்தை பிரிட்டன் கண்டிருக்கிறது. ஜூன் 2022இல்தான் மிக அதிகமான வெப்பம் நிலவியிருக்கிறது. வழக்கமான சராசரி வெப்பத்தை விட 10 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக பிரிட்டனின் தட்பவெப்பநிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்பாக 1940 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளின் ஜூன் மாதங் களில் இருந்ததுதான் இதுவரையிலான அதிக வெப்பமாகும்.

எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான தனது முடிவைத் தானாகவே முன்வந்து சவூதி அரேபியா நீட்டித்திருக்கிறது. எண்ணெய் சந்தையை நிலையாக வைத்துக் கொள்வதற்காக ஜூலை மாதத்தில் குறைவான உற்பத்தியை மேற்கொள்ள முடிவு செய்திருந்தது. தற்போது ஆகஸ்டு மாதத்திற்கும் அந்த முடிவை நீட்டித்திருக்கிறார்கள். நிலைமை சீராகாவிட்டால் மேலும் நீட்டிப்புகள் இருக்கலாம் என்றும் சவூதி அரேபியாவின் எரிசக்தித்துறை கூறியுள்ளது.

;