states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் சூதாட்டத்தால் பண இழப்பு ஏற்பட்டு தற்  கொலைகள் அதிகரித்த தால், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு சட்டம்  இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து  செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு  நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்  கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்த நிலையில், இந்த சட்டத்தை இயற்ற தமிழ்  நாடு அரசுக்கு அதிகாரமில்லை எனவும்,  திறமைக்கான விளையாட்டான ரம்மி யை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட் டாக கருத முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால்  இந்த சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அர சுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம் சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம்  கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அரசு  தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. கடந்த விசாரணையின் போது வாதங்கள் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்  களை தாக்கல் செய்வதற்காக விசார ணையை தள்ளிவைத்திருந்தனர். இந்த வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பி லும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வ மான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட தையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி கள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

தொடரும் நீட் படுகொலை ராஜஸ்தானில்  மேலும் ஒரு மாணவி தற்கொலை

நாட்டின் நீட் பயிற்சி மையங்களின்  பிரதேசமாக உள்ளது ராஜஸ்தா னின் கோட்டா நகரம். இங்கு  ஆயிரக்கணக்கில் நீட் பயிற்சி மையங்கள்  இருப்பதால், உள்ளூர் மாணவர்கள் மட்டு மின்றி வெளிமாநில மாணவர்கள் விடுதி யில் தங்கி கோட்டாவில் பயின்று வரு கின்றனர். ஆனால் சமீபகாலமாக கோட்டா நகர நீட் பயிற்சி மையங்களில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து  கொள்ளும் நிகழ்வுகள் சர்வ சாதாரண மாக அதிகரித்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நீட் தேர்வு பயிற்  சிக்காக கோட்டாவில் தங்கி படித்த 2  வெளிமாநில மாணவர்கள் பயிற்சி மையத்  தில் தேர்வை எழுதிய பின்னர் அடுத்த டுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், கோட்டாவின் விக்யான் நகர்  காவல் நிலையம் அருகே எலெக்ட்ரானிக் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நீட் தேர்வு பயிற்சிக்கு படித்து  வரும் ரிச்சா சிங் (வயது 16) என்ற மாணவி  செவ்வாயன்று இரவு தனது விடுதி அறை யில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரிச்சா சிங், ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் ஆவார்.  ஒரே மாதத்தில் நீட் பயிற்சி பெறும்  மாணவர்களின் தற்கொலை எண்  ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ள நிலை யில், நடப்பு ஆண்டில் நீட் பயிற்சி மாண வர்களின் தற்கொலை எண்ணிக்கை 25-ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தில்  5 பேர் சுட்டுக்கொலை

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச  மாநிலத்தின் தாதியா மாவட்  டத்திற்கு உட்பட்ட ரெட்டா  கிராமத்தில் மாடுகளை மேய்க்கும் இட  உரிமை தொடர்பாக இரு பிரிவினரி டையே தகராறு ஏற்பட்டது. தொடக் கத்தில் கைகலப்பாக இருந்த மோதல் தீவிரமடைந்து இருதரப்பினரும் ஒரு வரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்  கொண்டதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற தாதியா, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்  தக்கது. 

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் செப்.18 முதல் 20 வரை நடைபெறவுள்ள நிலையில், செப்.17 அன்று அனைத்துக்கட்சி கூட்டத்  திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்  ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற  விவகாரங்களுக்கான அமைச்சர் பிரக லாத் ஜோஷி அனைத்துக்கட்சி நாடா ளுமன்ற குழு தலைவர்களுக்கு அனுப்பி யுள்ள மின்னஞ்சலில்,”தில்லியில் வரும்  செப்.17 அன்று மாலை 4.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.

போபாலில்  முதல் பொதுக்கூட்டம்!

‘இந்தியா’ கூட்டணியின் சார்பில், நாடு முழுவதும் 6 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் முதல் பொதுக்கூட்டம், அக்டோபர் முதல் வாரத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும்  தேர்தல் வியூக குழுவின் முதலாவது கூட்டம், தில்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் மாலை 4.30 மணிக்குக் கூடியது.  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், ஜேடி(யு) தலைவர் லாலன் சிங் உள்ளிட் டோர் தவிர, குழுவின் மற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமலாக்க இயக்குநரகத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்ததால், அபிஷேக் பானர்ஜியால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. கூட்டத்தின் முடிவில் தலைவர்கள் கூட்டாக செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரு மான கே.சி. வேணுகோபால் பேசுகையில், ‘இந்தியா’ கூட்ட ணியின் சார்பில் நாடு முழுவதும் 6 நகரங்களில் பொதுக்கூட்டங் கள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதில் முதல் கூட்டம், அக்டோபர் முதல் வாரத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் என்றும் அறிவித்தார். மாநிலம் வாரியாக தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்களைத் துவங்குவதெனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, செப்.13- தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் புதனன்று (செப்.13) சென்னையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம்  ரூ.5 ஆயிரத்து 480 ஆக உள்ளது. வெள்ளி விலை கிலோ ரூ.1000 குறைந்து ரூ. 77 ஆயிரமாக உள்ளது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்கப் படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை: குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடக்கம்

சென்னை, செப்.13- கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின், காஞ்சிபுரத்தில் தொடங்கி  வைக்கிறார். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற, சுமார் 1.63 கோடி பேர் விண்ணப் பித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்தில் பயன் பெற தகுதி யானவர்கள் என்று தேர்ந்தெ டுக்கப்பட்டவர்கள் 1,06,50,000 பெண்கள் ஆவார்கள். இவர்க ளுக்கு வரும் 15ஆம் தேதி முதல்,  மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும். மகளிர் உரிமை தொகை  திட்டத்திற்கு விண்ணப்பித்த வர்களில் 3 லட்சம் அரசு ஊழியர் கள் என்று அரசு அதிகாரிகள் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.  இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே முறையாக விதிமுறைகளை அரசு வெளியிட்டு இருந்த போதும் 3  லட்சம் அரசு ஊழியர்கள் விண்  ணப்பித்து இருக்கின்றனர். இத னால், அவர்களின் விண்ணப்பங்  கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்பும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக்  கொள்ளப்பட்டது என்ற தகவல்  அனுப்பப்பட்டுள்ளது. ரூ.1 அனுப்பி பயனாளிகளின் வங்கிக்  கணக்கில் வரவு வைக்கப்படு கிறதா என்பது குறித்தும் சோதனை செய்யப்படும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்ட தகவலும் ஒரு சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

4 வடமாவட்டங்களில் 2 நாட்கள் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை,செப்.13- ஒவ்வொரு மாவட்டத்தி லும் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள், அரசு திட்டங்களின் நிலைகள் குறித்து மண்டல அளவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை தென்மண்ட லம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம் பகுதிக ளில் அவர் ஆலோசனை களை நடத்தி முடித்துள் ளார். இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சியை தவிர்த்து, சென்னை மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாவட்ட அலுவ லர்கள், காஞ்சிபுரம், செங் கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் பங்கேற்பார் கள். இந்த கூட்டம் செங்கல்பட்டு அல்லது சென்னையில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முக்கிய வளர்ச்சித் திட்டப் பணிகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றின் 2 ஆண்டு கால முன்னேற்றங்கள் குறித்து விரிவான அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து துறை செயலர்களுக்கு, சிறப்பு திட்டங்கள் செயலாக் கத் துறை செயலர் தாரேஸ்  அகமது கடிதம் அனுப்பி யுள்ளார்.