states

img

மோடிக்கு தெய்வம் அதானியும், அம்பானியும்தான்

சென்னை, செப்.20- மோடிக்கு தெய்வம் அதானியும், அம்பானி யும்தான் தெய்வக் குழந்தைகள் எனக் கூறும்  மாற்றுத் திறனாளிகள் அல்ல என சு.வெங்க டேசன் எம்.பி. கூறினார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் 4ஆவது மாநில மாநாடு செங்  கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோயில் அருகே தோழர் டி.லட்சுமணன்  நினைவரங்கில் செவ்வாயன்று (செப். 20) துவங்கியது. மாநில துணைத் தலைவர் பி.திருப்பதி சங்க  கொடியை ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் பி.ஜான்ஸிராணி தலைமை தாங்கினார். வர வேற்புக்குழு செயலாளர் இ.சங்கர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் டி.வில்சன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகை யில், மற்ற அமைப்புகள் நடத்தும் போராட்டத் திற்கும் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் போராட்  டத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.  மற்ற அமைப்புகள் நடத்தும் போராட்டத்திற்கு இருக்கும் அழுத்தம், தாக்கம் எண்ணிக்கை யை பொறுத்து அமையும். ஆனால் மாற்றுத்திற னாளிகள் நடத்தும் போராட்டம் எண்ணிக்கை யை வைத்து அமைவதில்லை. ஒரு லட்சம் பேர் கூடி நடத்தும் போராட்டத்தின் தாக்கத்தை விட,  1000 மாற்றுத்திறனாளிகள் கூடி நடத்தும் போராட்  டத்திற்கு மிகப்பெரிய தாக்கம் உருவாகும். அப்படியென்றால் யார் சக்தி வாய்ந்தவர்கள் என்ற கேள்வி எழுகிறது.

சமஸ்கிருத திணிப்பு 

பொருளாதாரம் சார்ந்த, உரிமைகள் சார்ந்த நம்முடைய கருத்துக்கள். காலம் காலமாக நம்மை குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் சித்  தாந்தத்திற்கு எதிரான அரசியல் கூறுகள். இவை  இரண்டும் மிக முக்கியமாக பார்க்கப்பட வேண்டி யவை. ரயில்வே முன்பதிவு செய்யும் இணைய தளத்திற்குள் சென்றால், பொது, தட்கல், பிரிமி யம் தட்கல் என தனித்தனி காலம் இருக்கும்.  அதில் திடீரென்று  ‘திவ்யாங்’ என்ற ஒரு காலத்தை இணைத்தார்கள். அது முதலில் யாருக்கும் புரிய வில்லை. அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது.  அங்கிலம் தெரியாதவர்களுக்கு புரியும் வகை யில் அவரவர் தாய் மொழியில் என்ன காலம்  என்று குறிப்பிடலாம். ஆனால் சமஸ்கிருத மொழி யில் திவ்யாங் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். 

தெய்வீக குழந்தைகளை  அலைய விடுபவர் மோடி 

8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழியில் குறிப்பிடப்படவில்லை. 14 ஆயிரம் பேசும் சமஸ்கிருத மொழியில் குறிப்பிடப்படுவதன் அவசியம் என்ன? நோக்கம் என்ன? திவ்யாங் என்றால் தெய்வீகக் குழந்தை என்று பொருள். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மோடி மாற்றுத்திற னாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 35 விழுக்காடு நிதியை குறைத்துள்ளார். தெய் வீகக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 35 விழுக்காடு நிதியை ஒருவர் குறைக்கிறார் என்றால், குறைக்கப்பட்டவர்கள் தெய்வீகக் குழந்தைகள் என்றால், குறைத்தவர் என்ன சாத்  தானின் குழந்தையா? தெய்வீகக் குழந்தை என்  றால் நிதியை கூட்டித்தானே வழங்க வேண்டும். தெய்வத்திற்கு அசுரனோ அல்லது சாத்தானோ தண்டனை கொடுப்பதாக புராணம் கூறுகிறது. நாங்கள் தெய்வீகக் குழந்தை என்றால் நீ அசு ரனின் குழந்தையா அல்லது சாத்தானின் குழந்  தையா என்று முதலில் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். 

பொதுத்துறை நிறுவனத்திற்கு நிதிவெட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து உபகரணங்களையும் தயார் செய்யும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான அலிம்கோ என்ற பொதுத்துறை நிறு வனத்திற்கு இந்தாண்டு 10 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திற னாளிகளுக்கான கல்வி உதவித் தொகை 5 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சாமானியக் குழந்தை களுக்கு குறைக்கவில்லை. தெய்வீகக் குழந்தைகளுக்கு குறைக்கப்பட்டிருக்கி றது. ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யும் நீங்கள் தெய்வீகக் குழந்தைக ளுக்கு நிதியை குறைக்கலாமா என கேள்வி எழுப்பினார். தெய்வத்திடமே இவ்வளவு கபட நாடகம் ஆடும் இவர்கள் மனிதர்களி டத்தில் என்னென்ன கபட நாடகம் ஆடு வார்கள் என்பதை அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கும் ஜிஎஸ்டி வரியா?

 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி. தெய்வீகக் குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிப்பதுதான் இவர்களின் சித்தாந்தம். மனிதனை விட உயர்ந்த தெய்வத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரேசன் கடைகளிலே போய் மோடி படம் எங்கே எனக் கேட்டு நாட்டையே கேலிக்கூத்தாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

நிதி ஒதுக்கீட்டிலும் வெட்டு

கடந்த ஆண்டு தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் துறைக்கு என ஒதுக்கீடு செய்தது 834 கோடி. ஆனால் கடந்த ஆண்டு மோடி அரசு ஒதுக்கீடு செய்தது 1044 கோடி ரூபாய். ஒரு மாநிலத்தில் 834 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஒன்றிய அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்து வெறும் 1,044 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்றால் ஒன்றிய அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் மீது அக்க றையில்லை என்பது தெளிவாகத் தெரி கிறது. தெய்வீகக் குழந்தை என முலாம் பூசும் மோடி வெறும் 1044 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறார், ஆனால் பெரியார் மண்ணில் தெய்வீகக் குழந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு இந்தியாவை விட சிறப்பாக உள்ளது. இன்னும் நிதியை அதிகப்படுத்த வேண்டும், உதவித் தொகை இன்னும் உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

மோடிக்கு யார் தெய்வம்? 

கொரோனா காலத்தில் 34.99 விழுக்காடு இட ஒதுக்கீட்டை குறைக்கி றார்கள் என்றால் அவர்களின் சிந்தனை எந்தளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதானிக் கும், அம்பானிக்கும் இந்தாண்டு மட்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது ஒன்றிய மோடி அரசு. மோடிக்கு தெய்வம் அதானியும், அம்பானி யும்தான். ஆனால் மாற்றுத்திறனாளிகள் தான் தெய்வம் என்று வாய்கூசாமல் பொய் பேசுபவர்கள். முலாம் பூசும் வேலையில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள். மும்பை விமான நிலையத்தை அதானி விலைக்கு வாங்குகிறார். அதற்குண்டான 12 ஆயிரம் கோடியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  கடனாக வழங்குகிறது. அதை அதானியால் செலுத்த முடியவில்லை என்று ஒன்றிய அரசு கடந்தாண்டு அதை தள்ளுபடி செய்து விட்டது.

பாவம் என்ற சொல் உங்கள் உயி ருக்குள் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. சமூகம் மீண்டும் மீண்டும் அந்த சொல்லை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் மதங்கள். போன ஜென் மத்தில் நீ செய்த பாவத்தால் இந்த ஜென்மத்தில் நீ மாற்றுத்திறனாளியாக இருக்கிறாய் என்று மதங்கள் எல்லாம் கூறு கின்றன. நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது விதி. பாவத்தின் உருவம் நீ என கூறுவதுதான் இவர்களின் தத்துவம். உண்மையில் போன ஜென்மத் தின் பாவமா இது. இந்த குறைபாடுகளுக் கும் உங்களுக்கும் ஏதாவது நேரடி தொடர்பு இருக்கிறதா? மாற்று ஆற்ற லோடு இருப்பதென்பது, மதத்தின் கழி விரக்கத்தின் வழியாக சமூகம் கடக்க நினைத்தால் ஒருபோதும் அதை அனும திக்காதீர்கள். கர்மாவும், பாவமும்தான் மாற்றுத்திறனாளிகள் எதிர்த்துப் போராட வேண்டிய முதல் தத்துவ சிந்தனையா கும். பாவமும் கிடையாது, புண்ணியமும் கிடையாது நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் என்று தெளிவுபடுத்துங்கள், இன்னும் ஒருபடி மேலே போய் உன்னை விட அதிக ஆற்றல் கொண்ட ஒரு மனிதன் என்ற சிந்தனையை விதையுங்கள். உங்கள் போராட்டம் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தை அதிர வைக்கும். சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும். சட்டத்தை மட்டும் இயற்றினால் போதாது, அதற்கு பின்னால் ஒரு மனித மனம் தேவைப்படுகிறது. அதிகாரத்தை இழுத்து அடிக்கிற தத்துவத்தின் கூர் முனையில் மதம் உருவாக்கிய சிந்த னைக்கு எதிராக போராட வேண்டும். சர்வ தேச சமூகம் அங்கீகரித்துள்ள கோட் பாட்டை அமல்படுத்துவதற்கான போராட் டத்தை, நம்முடைய உரிமைகளுக்கான போராட்டத்தை, ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

 நம்புராஜன்

பிரதிநிதிகள்  மாநாட்டில் மாநில பொ துச்செயலாளர் எஸ்.நம்புராஜன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். கல்வியாளர் தாவூத் மியாகான், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி கவுரவத் தலைவர் பி.சம்பத், சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலா ளர் எஸ்.கண்ணன், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.




 

;