states

மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, செப்.10- மக்கள் தலையில் சுமையை ஏற்றாமல் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:  தமிழ்நாட்டில் செப்டம்பர் 10 சனிக்  கிழமையன்று முதல் மின்சார கட்ட ணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை  உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சத விகிதம் என்ற அளவில் மின் கட்டண  உயர்வு இருக்கும் என்றும் அறி விப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்  வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்ட ணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது  வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வி னையும் மோசமாக்கிவிடும் என்  பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். மேலும் ஒவ்  வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை  இல்லாதது என்பதையும் கவனப் படுத்துகிறோம்.

அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வர லாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும், பெட்ரோ லியப் பொருட்களின் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின்  இத்தகைய நாசகர பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ் நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்ட ணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும். உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டுமென வலி யுறுத்தி  தமிழ்நாடு முழுவதும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பொது மக்களும், சிறு-குறு தொழில் முனை வோர்களும் கருத்துக் கேட்பு கூட் டங்களில் கலந்து கொண்டும், பல்லா யிரக்கணக்கான மனுக்கள் அளித்  தும் வலியுறுத்தினர். ஆனால் அவை களை புறந்தள்ளி ஏற்கனவே உத்தே சித்த மின் கட்டண விகிதங்களில் எந்த  மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப் பட்டுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூ லிக்கப்படும் என்பதையும் நடை முறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒரு முறைதான் கட்டணம் கணக்கிடப் படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது. மின்வாரிய நெருக்கடியை சமா ளிக்க அரசியல் கட்சிகள், துறை சார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டா ளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்  பூர்வமான மாற்று ஆலோசனை களை செயல்படுத்துவதற்கு மாறாக,  மக்கள் தலையில் சுமையை ஏற்று வது அரசுக்கு அவப்பெயரையே உரு வாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம். எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமை யாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய  வேண்டும் என்றும் மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமி ழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயற்குழு வலி யுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.